ஞாயிறு, 7 ஜூலை, 2013

இளவரசனின் மரணம் சொல்லும் நீதி

                      இளவரசனின் மரணம் சொல்லும் நீதி
                       (ச.பாலமுருகன்)
  • முடிந்தது கேளிக்கூத்து". இது உலகப்புகழ்பெற்ற ரஷ்ய நாவலான மு.யூ.லேர்மந்தேவ்வின் "நம் காலத்து நாயகனில்" வரும் புகழ்பெற்ற வரிகளாகும். தர்மபுரி நாய்க்கன் கொட்டாய் கிராம இளைஞனான இளவரசனின் சாவு அந்த வரிகளை நினைவூட்டுகின்றன. கேளிக்கூத்தை அறங்கேற்றிய சாதிய வாதிகள் நாடகக்காதல் , ஏமாற்றுக்காதல் என கச்சை கட்டிக்கொண்டிருந்தனர்.சாதிய சமூகம் இந்த தம்பதியினரை ஓடஒடவிரட்டியது. நான்குக்கும் மேற்பட்ட  தாழ்த்தப்பட்ட மக்களின் கிராமங்கள் முழுதும்  கொழுத்தப்பட்டது.அனைத்து பொருள்களும் கொள்ளையடிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நாளீல் வீதியில் ஏதுமற்றவர்களாக மாற்றித் தள்ளப்பட்டனர்.தமிழகம் ஒரு காதல் திருமணத்திற்காக  அதுபோன்ற ஒரு சாதிய கொடூரத்தை அந்த அளவில் கண்டிருக்கவில்லை. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக எல்லா  சாதிய அதீக்க சக்திகளையும்  ஒன்று திரண்ட பாட்டாளி மக்கள் கட்சி முயன்றது. அதன் தலைவர்கள் தொடர்ந்து சாதிய வன்மத்தை பேசினர்.அதன் தொடர்ச்சியாக  2013 ஏப்ரல் மாதம்  மரக்காணத்தில் நிகழ்ந்த கலவரம் ஒரு திட்டமிட்ட வன்முறையாக இருந்தது. இந்த பரந்த உலகில் ஒரு மூலையில் விரும்பிய ஆணும் ,பெண்ணும் சேர்ந்து உயிர் வாழ வாய்புகளற்றுப் போன நிலையில் தர்மபுரி காதலர்களான  திவ்வியாவும், இளவரசனும்  பிரிக்கப்பட்டனர்.இந்த பிரித்தலுக்கு சாதிய சக்திகள் சட்டம் மற்றும் நீதிமன்றங்களையும் கருவியாக்கிக்கொண்டது.  தங்ககளின் காதலுக்காக,ஒரே சாதியினர் என்ற ஒற்றை காரணட்திற்காக அனைத்தையும் இழந்த மக்களின் முன், மனைவியினை சாதி ஆதிக்கத்திற்கு பறி கொடுத்த ஒரு இளைஞனாக நின்றான் இளவரசன்.தமிழகமே கவனித்த ஒரு காதல் இணையரின் வாழ்க்கை நீர்குமிழி போல முடிவுக்கு வந்தது. திவ்வியா சர்ந்த சாதியின் சமூகக்கட்டுக்குள் அவள்        சிறைப்படுத்தப்பட்டாள்.அதன் பின்   4.7.2013 தேதி  தர்மபுரியில்  இரயில் தண்டவாளம் அருகில் கிடந்த அவனின் உயிரற்ற உடல் பல்வேறு ஐயங்களை எழுப்பின. அது தற்கொலையா? அல்லது கொலையா?.இந்த விவாதங்கள் எதிர்காலத்திலும் தொடரும் .ஆனல் ஒன்று நிச்சயம்  முடிந்தது ஆதிக்கவாதிகளின் கேளிக்கூத்து. அவர்கள் இதையே விரும்பினார்கள்.

    சமூகம் இந்த கேளிக்கூத்தின் வெறும் மெளன சாட்சி மட்டுமா? நம்மால் இந்த பார்வையாளர் பாத்திரத்தை தவிர வேறு எதுவும் செய்ய முடியாதா?. கடந்த 7 நவம்பர்  2012 ல் நாய்கன் கொட்டகை உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் கொழுத்தப்பட்ட நிகழ்வுக்கு பின் அங்கு சென்றிருந்த போது, சிதைந்து கிடந்த இளவரசனின் வீட்டிற்கு சென்று பார்த்த சமயம் அந்த வீட்டினுள் உடைந்து கிடந்த ஒரு புகைப்படம்( துணை இரானுவ படையில்(சீ.ஆர்.பி.எப்) உள்ள அவரின் சகோதரரின்  குரூப்படம் எனகூ றப்பட்டது. . இளவரசனின் ஒரு சகோதரர் துணை  இராணுவத்தில் இருப்பதாக கூறினர். இளவரசனும் காவல்துறையில் சேரவேண்டுமென்பது ஒரு லட்சியமாக இருந்திருக்கிறது.அவன் காவல்துறைக்கு தேர்வாகி  பணி உத்திரவும் வந்திருந்தது.  ஒரு நல்ல இளைஞனை காவல்துறை இழந்துவிட்டது.தமிழகத்தில் இளவரசனின் மரணம் முற்போக்கு ,சனநாயக சக்திகளைத் தாண்டி சாமானிய மக்கள் மத்தியில் கூட இரக்கத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.  அவன் வாழ்ந்திருக்கவேண்டிய இளைஞன்.அவனை ஒட்டுமொத்த சமூகமும் பாதுகாக்க தவறிவிட்டது.நீதிமன்றமும் கூட வெறும் சட்டம் சார்ந்த நிலையிகளைத் தாண்டி ,ஒரு சிறப்பு வழக்காக இவ் வழக்கினை அனுகியிருக்க வேண்டும் .காதலர்களை பிரிக்க நிணைத்தோர் எல்லா பாதுகாப்பு வடிவங்களையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டனர்.
    தர்மபுரியில் ஆதிக்க சாதியான வன்னியச்சாதியினரும் அவர்களின் கட்டபஞ்சாயத்துகளும் இந்த காதலர்களின் நிகழ்வில் நடந்துகொண்ட அணைத்து செயல்பாடுகளும் நமது நாட்டின் ஒட்டு மொத்த சனநாயக பண்புகளையும் ,சட்டத்தின் ஆட்சியையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

    நமது சமூகத்தில் நீண்டகாலமாகவே விரும்பிய ஆணும் பெண்ணும் குடும்பமாக மாறும் உரிமை அவர்கள் தீர்மாணிப்பதை விட அவர்கள் சார்ந்த சமுகம் தீர்மாணிப்பதாக உள்ளது. உலக முழுதும் இநத அத்துமீறல்களால்  ஏராளமாக  காதலர்களின் உயிர் வாழும் உரிமை பறிக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்கு பின் 1948 ல் உருவாக்கப்பட்ட  உலகளாவிய மனித உரிமை சாசனம்  விரும்பிய ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து குடும்பமாக வாழ்வது மனித உரிமை என பிரகடனப்படுத்தியது. அவர்களின் குடும்பம் என்பது சமூகத்தின் இயற்கையான அடிப்படை அலகு எனவும் அதனை அரசும், சமூகமும் பாதுகாக்க வேண்டும் என்றும்  கூறியது. தர்மபுரி நாய்க்கன் கொட்டாய் காதலர்களான இளவரசன், திவ்யா காதலில்  அரசும் ,சமூகமும் இவர்களை பாதுகாத்ததா? நமது சமூகம் நடந்து முடிந்த எல்லா நிகழ்வுகளுக்கும் வெற்றுப்பார்வையாளராக நின்றது. நீதிமன்றத்திற்கு வந்திருந்த திவ்யா தனது தாயாருடன் செல்வதற்கு கூறிய காரணம் மிக முக்கியமானது. அந்த பெண் இன்னமும் தனது கணவரை காதலிப்பதாகவும், பெரிதும் அரசியலாக மாற்றப்பட்ட  தங்களின் திருமண  நிகழ்வினால் கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்றும் கூறி சென்றுள்ளார். காலகாலமாக நமது ஆதிக்க சமூகம் நிகழ்த்திய கோரத்தில் அடுத்த பலியாக திவ்யா ,இளவரசன் காதல் வீழ்ந்துவிட்டது. தன் குடும்ப உறுப்பினர்களின் திருமாணத்தை தீர்மாணிக்கும் உரிமை மறுக்கப்பட்ட சமூகத்தால் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ,சாதிய சக்திகளால் தொடர்ந்து இழிவு படுத்த நிலையில் திவ்யாவின் தந்தை நாகராஜனின் மரணம் நிகழ்ந்தது. அடுத்து நாய்க்கன் கொட்டாய் கிராமத்தில்  சாதிய வன்முறையியினை கண்டித்து  நடந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒரு  மங்கம்மா என்ற பெண்னின் மரணம், தற்போது இளவரசனின் மரணம் என நீழ்கிறது உயிர் பலி பட்டியல்.
  • நமது தமிழக மண் ஒரு நீண்ட  சாதி மறுப்பு மற்றும் இந்து மதம்,பார்பனியம் மறுப்பு என்ற பெரியாரிய ,திராவிட அரசியல் நிகழ்வின் பின்புலத்தை கொண்டிருக்கிறது. இந்து மத சடங்குகளின்றி திருமணம் செய்வது திருமணமே அல்ல என நீதிமன்றங்களில் தீர்ப்பு வந்த பின்பும் ஆயிரக்கணக்கான சாதி மற்றும் சடங்கு மறுப்பு திருமணங்கள் நடத்தப்பட்டு ,அவை அரசியல் இயக்கம் என பரிணாமம் பெற்று நடந்த தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த இணையர்கள் வாழவே முடியாது என்ற ஆபத்தான அச்சுறுத்தலை இளவரசனின் மரணம் ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் கிராமங்களில் ஆட்சி செய்யும்ஆதிக்க  சாதியின் வன்மம் அதன் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் மாற்று அரசியல் இல்லாமையின் வெளிப்பாடே நடந்தேறிய வன்முறைகள். திராவிட அரசியலின் முக்கிய பண்பாட்டு கூறுகளாக கருதப்பட்ட சாதி மறுப்பு திருமணம் செய்தோர் சேர்ந்து இயக்கமாக வாழ்தல்,தொடர்ந்து சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்தல் அதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தல் என்ற சமூக நீதிக்கான செயல்பாடுகளை எந்த  தேர்தல் பாதை அரசியல் கட்சியினரும் முன்னெடுக்கவில்லை. அது திராவிடர் கழகம்  அல்லது அதிலிருந்து பிரிந்த பெரியார் திராவிடர் கழகம் அல்லது திராவிடர் விடுதலைக்கழகம் போன்ற சிறிய  இயக்கங்களின் செயல்பாடுகள் என குறுகிப் போயுள்ளது. இத்தனைக்கும் ஒரு சாட்சியின் முன் உறுதிமொழி ஏற்று, திருமணம் செய்வதாக ஒப்புக்கொள்வதே, இந்து திருமண சட்டத்தில் சட்டபூர்வமான திருமணம் என்று சட்டம் உள்ள மாநிலமான தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்தல் இல்லாமல் போய்விட்
  • டது.மேலும் மிக மோசமான வன்முறைகள் காதலர்கள் மீது சாதிய கெளரவத்திற்காக நடந்தேறியும் வருகின்றது, காதலித்த இணையர்களான திவ்யாவும் ,இளவரசனும் கடந்த ஆண்டு ஓடிப்போகாமல் போயிருந்தால் நிச்சயம் அவர்கள் ஆதிக்க சமூகத்தால் அன்றே  மோசமான விளைவினை எதிர்கொண்டிருப்பார்கள்.
  • கடந்த 2000 ஆண்டிலிருந்து 2010 வரை தமிழகத்தில் காதல் விவகாரம் தொடர்பாக நடந்தேறிய கொலைகள் பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்ட போது காவல் நிலையங்களில் பதியப்பட்ட சில கொலைகள் பற்றி அறிய முடிந்தது.
  • 2003 ஜீலை மாதம் கடலூர் மாவட்டம் விருதாசலம் அருகில் உள்ள புதுகோரைப்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் சாதியினை சார்ந்த இளைஞன் முருகேசன் .இவர் அண்னாமலை பல்கலைகழகத்தில் கெமிக்கல் இஞ்சினியரிங் பட்டம் பெற்றவர். கிராமத்தில் சொந்தமான விவசாய நிலங்கள் என பிறரைச் சாராது வாழும் பொருளாதார நிலை கொண்ட குடும்ப பின்னனியில் வளர்ந்தவர் . அவர் அக் கிராமத்தை சார்ந்த வன்னியர் சாதி பெண்ணான கண்னகியினை  காதலித்தார்.  இருவரும் 2003 மே மாதம் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின் முருகேசனுக்கு ஒரு நல்ல
  • வேலை கிடைத்ததும் தங்களின் திருமணத்தை வெளிப்படையாக சொல்வது என முடிவு செய்திருந்தனர். முருகேசனுக்கு  திருப்புரில் வேலை கிடைத்ததும் கண்னகியினை அழைத்து சென்றுவிட்டார். கண்னகியின் தகப்பனார் கிராம பஞ்சாயத்து தலைவர் . தனது சாதிய சக்திகளால் இரவோடு இரவாக முருகேசனின் குடும்பத்தை சேர்ந்த அவர்ன் தகப்பனார், சித்தப்பா, தம்பி என அவரின் சொந்தக்காரகளை கடத்தி ம்ருகேசன் ,கண்னகி உள்ள இடம் குறித்து கேட்டு சித்தரவதைக்கினர். நெய்வேலி நிலக்கரி சுரக்கத்திற்கு நிலக்கரி கண்டறிவதற்க்காக தோண்டப்பட்ட ஆழ்துளாய் கிணற்று குழியில் கயிறு கட்டி முருகேசனின் தம்பி தொங்கவிடப்படும் அளவு சித்திரவதைக்கு அந்த குடும்பம் உட்படுத்டப்பட்டது.. இறுதியில் முருகேசனின்  சித்தப்பா மூலம் இருவரையும் கிராமத்தில் சமாதானம் பேசுவதற்காக வரவழைக்கப்படுகின்றனர். அதனை நம்பி ஊருக்கு வந்தார்கள் காதலர்கள் .ஆனால் ஊரின் நடுவில் ஒட்டுமொத்த கிராமுமே வேடிக்கை பார்க்க கண்ணகிக்கும், முருகேசனுக்கும் வாயில் பூச்சி மருந்து விஷம்  வழுக்கட்டாயமாக புகட்டப்பட்டது, அவர்கள் திமிறிய போது காதில் அந்த விஷம் ஊற்றப்பட்டது. அவர்கள் துடிதுடித்து செத்த பின்பு இருவரின் உடலும் கிராம சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. இந்த நிகழ்வினை காவல் நிலையத்தில் சொன்ன முருகேசனின் தாயார் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டார். பின்  காவல்துறையினரோ கண்னகியினை அவர் தந்தை கொன்றதாகவும், முருகேசனை ,முருகேசனின் தந்தை மற்றும் சித்தப்பா கொன்றதாகவும் வழக்கு தாக்கல் செய்தது. சாட்சிகளை குற்றவாளிகளாக மாற்றும் போது சாட்சி சொல்ல ஆளின்றிப்போய்விடும் என்பதே காவல்துறையின் ஆதிக்க சாதி நல்ன்பேனும் கீழ் தரமான அந்த யுக்தி. இதில் வேடிக்கை என்னவென்றால் கண்னகியின் தகப்பனார் துரைசாமி பஞ்சாயத்து தலைவர் என்பதால் ஒரு மாதத்திற்கு மேல் சிறையிலிருந்தால் பஞ்சாயத்து தலைவர் பதவி பறி போய்விடும் எனவே ஜாமீனில் விடுதலை செய்யவேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் வேண்டப்பட்டது, அதனை ஏற்று  சிறைப்படுத்தப்பட்ட முன்றே வாரத்தில்  குற்றவாளிகளை விடுதலை செய்தது நீதிமன்றம்.(1) இவ் வழக்கு சி.பி.ஐ புலன் விசாரணக்கு உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பொ.இரத்தினம் முயற்சியால் மாற்றப்பட்ட போதும் ,பழைய நிலையே தொடர்கிறது. இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்னமும் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது.
  • கடந்த 2007 ல் விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலம் காவல் நிலையத்திகு உட்பட்ட மறவநத்தம் கிராமத்தை சார்ந்த சின்னசாமியின் மகள் சுதா,கொங்கு வேளாளர் சாதியினைச் சார்ந்தவர் . அவர் திருச்சங்கோட்டில் பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது தன்னுடன் படித்த ஈரோடு அரச்சலூரைச் சார்ந்த தமிழ்செல்வன் என்பவரை காதலித்தார். தமிழ் செல்வன் முதலியார் சாதியினைச் சார்ந்தவர்.. படிப்பு முடிந்த பின்னர் காதலர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். தனது தந்தையால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த சுதா, தனது கணவனை அழைத்துக்கொண்டு வட இந்தியா சென்று விடுகின்றார். இருவரும் அங்க் பணியில் இருக்கின்றனர்.சில மாதங்கள் கழித்து தனது மகள் வட இந்தியாவில் இருப்பதையும் ,அவர் அந்த சமயம் கர்ப்பமாக இருப்பதையும் அறிந்த  சின்னசாமி தனது மகளை ஏற்றுக்கொள்வதாகவும் ,அவளுக்கு வளைகாப்பு நடத்த விரும்புவதாகவும் தகவல்களை கொடுத்து தனது ஊருக்கு வரும் படி அழைக்கின்றார்.இந்த வார்த்தைகளை நம்பி தனது குடும்பத்தினரை காண   மறவநத்தம் வந்த போது இருவரையும் வரவேற்ற சுதாவின் தந்தையும், சகோதரன் சங்கர் என்பவனும் ,அடுத்த சில நொடியில் இருவரும்  சேர்ந்து   இருப்பு பைப்பால் தாக்கி சுதாவை கொலை செய்து விட்டனர்.(2)
  • பழனியில் ஆசிரியர் பட்டயப்படிப்பில் படித்த பன்னாரி என்பவரும் திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டையினை சேர்ந்த பிரியாவும் காதலித்து வந்தனர். பன்னாரி பட்டியல் சாதியான  பள்ளர் சாதியினை சார்ந்தவர். பிரியாவோ கள்ளர் சாதியினை சார்ந்தவர். இருவரும் திருமணம் செய்துகொண்டு உடுமலைப்பேட்டை  மடத்துகுளத்தில் உள்ள பன்னாரியின் சகோதரியின் வீட்டில் வசித்து வந்தனர். சில நாட்கள் கழித்து அவர்கள் வீட்டிற்கு வந்த பிரியாவின் தந்தை மற்றும் இரண்டு உறவுக்காரகள் பிரியாவுடன் பேச வந்ததாகக்கூறிவிட்டு ,பிரியாவின்  வீட்டில் நுழைந்து கதவினை தாழிட்டுக்கொண்டு  பிரியாவை கொலை செய்துவிட்டனர்.(3)
  • இது போல தமிழக்தில் நடந்தேறிய சாதி வெறிக்கொலைகளை நாம் ஒரு நீண்ட பட்டியலிட முடியும். தமிழகம் எந்த விதத்திலும் காதலர்கள் மீது நடக்கும் வன்முறை இல்லா பரந்த முற்போக்கு கருத்துகளின் தாக்கம் உள்ள மாநிலம் என மார் தட்டமுடியாது.ஆனால்  இந்த வழக்குகளில் பெரும்பாலும் குற்றவாளிகள் நீதிமன்றத்தில்  சாட்சிகளை கலைத்து ,பிறல் சாட்சியாக மாற்றி ,தண்டனையிலிருந்து தப்பித்துவிட்டனர். மடத்துக்குளத்தில் கொல்லப்பட்ட பிரியாவின் வழக்கில் சாட்சிகள் பிறல்சாட்சியாக்கி குற்றவாளிகள்  வழக்கில் தங்களுக்கு எதிராக சாட்சியமின்றி செய்தனர்..நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்யத்தள்ளப்பட்டது.இந்த கொடூர  கொலைச் செயல் புரிந்தோர் எளிதில் விடுவிக்கப்பட்டனர். எந்த அக்கறையும் இந்த காதலர்கள் மீது காட்ட அரசும் ,சமூகமும் தயாரில்லை.இந்த காதலர்களை கொலை செய்த குற்றவாளிகளின் விடுதலை எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள்  சமூகத்தில் அதிகரிக்க வாய்ப்பினை ஏற்படுத்திவிடும். தமிழக காவல்துறை  இவ் வழக்குகளில் சாட்சிகளையும் பாதுகாக்கவில்லை. விடுதலைக்கு எதிராக மேல் முறையீட்டையும் செய்யவில்லை. கிராமப்புறங்களில் சாதியின் ஆதிக்கத்தால் நடைபெரும் கெளரவக்கொலைகள் என்று பொதுவில் வகைப்படுத்தப்படும்பெரும்பாலான கொலைகள் தற்கொலைகள் என முடிக்கப்படுகின்றன.மொத்தத்தில் அரசுக்கும் அதன் வெளிப்படையான வடிவமாக உள்ள காவல்துறைக்கும்  இதில் எந்த அக்கறையுமில்லை.    இந்த கொலைகளை செய்த  கொலைகாரகளுக்கு தூக்கு கயிறு காத்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் 2006 ஆண்டு நீதிபதி மார்க்கண்டேய கட்சு , லதாசிங் / எதிர்/ உத்திரபிரதேச அரசு,(4)என்ற வழக்கில்  எச்சரிக்கை செய்தார். மேலும் சாதிய சமூகம் பெரும் சாபக்கேடு என்றும் இந்த சாதிய முறை நாட்டில் உள்ள எல்லா நல்லவற்றையும் பாழ்படுத்திவிடும் ஆபத்தானத்தையும் ,அதனை ஒழிக்க சாதி மறுப்பு திருமணங்களே தீர்வுகள் என குறிப்பிட்டார்.  அரசும் ,சமூகமும் இந்த காதலர்களை பாதுகாக்கவேண்டும் . காதல் ஒரு மனித உரிமை என்று உரக்க பேசினார். (4)
  • மேலும் 2011 ல் 'ஆறுமுக சேர்வை /எதிர்/ தமிழ்நாடு அரசு ' என்ற வழக்கில் சாதியின் பெயரால் மற்றொரு மனிதனின் மனதை புண் படுத்த அனுமதிக்க முடியாது.என உச்சநீதிமன்றம்  குறிப்பிட்டது.ஆனால் எதார்த்ததில் காதல் திருமணங்களுக்கு எதிராக  நீளும் வன்முறைகளை தடுக்க ஒரு தொலைநோக்கு பார்வையில் எவ்விதமான தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுக்க தயாரில்லை. வட இந்தியாவில் பல்வேறு காதலர்களின் கொலைக்கு காப் பஞ்சாயத்துக்கள் என்ற சாதிய கட்ட பஞ்சாயத்து காரணமாக உள்ளது, தமிழகத்தில் மேலே விவரிக்கப்பட்ட சம்பவங்கள்   இளவரசன், திவ்யா நிகழ்வு  உள்ளிட்ட எல்லாவற்றிலும் சாதிய கட்டபஞ்சாயத்துக்களே உயிர் வாழும் உரிமையினை முடிவு செய்யும் அமைப்பாக உள்ளது. பெண்களை மோசமான இத்தகைய மிரட்டல்கள் மற்றும் வன்முறைகள் மூலமாக தங்களின் கட்டுப்பட்டிலேயே வைத்துக் கொள்ள சாதிய சமூகம் முயலுகின்றது. அதன் சட்டங்களை, தடைகளை மீறுவோரை அது தண்டிக்கிறது. இளவரசன்,திவ்யா பிரச்சனையினை சற்று நோக்கும் ஒவ்வொருவரும் இதனை உணர  முடியும், இத்தகைய   போக்கு நமது சனநாயகத்தின் அடிப்படையினை கேள்விக்குள்ளாக்குகிறது. இத்தகைய பஞ்சாயத்துகளை தடை செய்ய மத்திய சட்ட ஆணையம்  பரிந்துரைத்துள்ள  திருமணம் தொடர்பன நிகழ்வுகளில் தலையிடுவதை தடுக்கும் சட்டம் The prohibition of unlawful assembly (interference with the freedom of matrimonial alliance ) bill 2011 சட்டமாக மாற்றப்படாமல் வெறும் பரிசீலனை நிலையிலேயே உள்ளது. இந்த "காப்" பஞ்சாயத்து போன்ற   கட்ட பஞ்சாயத்து ஆதிக்க சாதி சக்திகள் ஜாட் சாதியின் வாக்குகளை  தீர்மாணிப்பவர்களாக உள்ளனர். ,ஆளும் கட்சி, எதிர்க் கட்சி என எல்லா கட்சியிலும் உள்ள அரசியல்வாதிகளும் இதன் ஆதரவில் தேர்வு செய்யப்படுகின்றனர்.பலர் இந்த பஞ்சாயத்துகளின் தீவிர ஆதரவாளர்களாகவும் உள்ளனர்.இந்த பஞ்சாயத்துகள் நாட்டின் சட்டங்களை புறக்கணித்து விட்டு தங்களின் சாதிய சட்டத்தை நடைமுறைபடுத்துகின்றது.ஒரே குலத்தில் அல்லது கூட்டத்தில் திருமணம் செய்வதை தடுத்தல் மீறி திருமணம் செய்தால் கொலை செய்தல் என அதன் சட்டவிரோத செயல்கள் தொடர்கின்றன.சுயநல அரசியல்வாதிகளுக்கு காப் பஞ்சாயத்து ஆதரவு தேவை என்பதால்  இந்த காப் பஞ்சாயத்துக்கு  வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் திருமண நிகழ்வுகளில் பிறர் தலையிடுவதை தடுக்கும் சட்டம் உருவாக்க வேண்டி சட்ட கமிசன் கொடுத்த ப்ரிந்துரை பாராளுமன்றத்தில்  சட்டமாக மாற்றப்படாமல்  கிடப்பில் போடப்பட்டுள்ளது.வெறுமனே  ஒரு சட்டம் மட்டும் புரையோடிப்போன சாதிய முறையினை மாற்றிவிடாது. ஆனால் திருமண நிகழ்வுகளில் விருப்பம் போல மணத்தேர்வு செய்வதில்  அரசின் தார்மீக ஆதரவு  நிலை என்ற ஒரு சட்ட நிலைக்கு  இந்த சட்ட உருவாக்குதல்  உதவும். சட்டம் ஒழுங்கு மாநிலப்பட்டியல் என்பதால் தமிழக அரசு இது போன்ற ஒரு சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் உருவாக்கி தனது  நிலைபாட்டை வெளிப்படுத்த வேண்டும். சாதிய பெருமை பேசி தனிமனித சுதந்திரத்தில் தலையீடு செய்யும் கட்ட பஞ்சாயத்துகள் ,இயக்கங்கள் மற்றும் அதன் நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என தடுக்கப்படவேண்டியது அவசியம். காவல்துறைக்கும் இந்த காதல் திருமண வழக்குகளில் மனித உரிமை பாதுகாப்புடன் துரிதமான செயல்பட பயிற்றுவிக்கப்படவேண்டியதும் அவசியமாகும்.திருமணம் மற்றும் காதலர் பிரச்சனைகளில் காவல்துறை உயர்சாதி, பிற்போக்கு மனப்பான்மையுடன் அதன் செயல்பாடுகள் உள்ளதை பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது எனவே  இப் போக்கு மாற்றப்படவேண்டும். வட இந்தியாவில் சாதிய கட்ட பஞ்சாயத்து வன்முறக்கு காதலர்களை பிடித்து ஒப்படைக்கும் வேலைக்கு காவல்துறை துணை போனதை மக்கள் சனநாயக உரிமைக்கழகத்தின் (PUDR) 2003 ஆம் வருட அறிக்கை வெளிப்படுத்துகின்றது.
  • டாக்டர்.பாபா சாகிப் அம்பேத்கர் சாதி ஒழிப்பு கட்டுரையில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டார்.
  •  " உங்கள் சாதியை விட்டு இன்னொரு சாதியினரோடு திருமணம் செய்து கொள்ளுங்கள் என எவ்வளவு தான் பிரச்சாரம் செய்தாலும் அதை மக்கள் ஏற்று கொள்ள மறுக்கிறார்களே, ஏன்? சாதி செங்கற்களால் கட்டப்பட்ட சுவர் அல்ல. ஒரு தடுப்பினை எடுத்து விட்டால் சாதியினை ஒழித்து விடலாம் என நினைக்க கூடாது. சாதி என்பது ஓர் உணர்வு. அது ஒரு மனநிலை. இந்துக்கள் சாதியினை ஏன் பின்பற்றுகிறார்கள்? அது தவறானது, மனித உரிமை மீறல் என்பதால் அதை அவர்கள் பின்பற்றவில்லை. அவர்கள் தங்கள் மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்களாக இருக்கிறார்கள். அதனாலே அவர்கள் சாதிமுறையை கடைபிடிப்பவர்களாக இருக்கிறார்கள்."என்றார். சாதியம், சனநாயக பண்புகளுக்கும் உரிமைகளுக்கும்   எதிரானதாக மாறிய நிலையில் மக்களின் மனநிலையில் ஆதிக்க உணர்வை கலைத்து,  சமூகத்தை சனநாயகப்படுத்தும் முக்கிய பணியினை செய்யவேண்டியது அரசாங்கத்தின் கடமை. தீண்டாமை என்ற சாதியத்தின் கோரத்தை அழிக்க எடுக்கும் தொலைநோக்கு செயல்பாடுகளே சாதிய வன்செயல்களுக்கான தீர்வை நோக்கி நகர்த்தும்.சாதிய அரசியல் சக்திகளை அம்பலபடுத்துவது, புறக்கணிப்பது மேலும் பொது வெளியில் தனிமைப்படுத்டுவதும் அவசியமானதாகும்.சாதிய வன்செயல்புரிந்தோர் மீது உறுதியாக எடுக்கும் தடுப்பு மற்றும் சட்டரீதியான தண்டனை என்பது சமூக அமைதிக்கும்,பாதுகாப்புக்கும் வழி வகுக்கும்.சமூகத்தின் பெரும்பாலன நல்ல சக்திகள் வெறும் பார்வையாளர்களகவே நில்லாது சனநாயக கடமையாற்ற பங்கேற்பாளர்களாக மாறவேண்டியதும் அவசியம்.
  • உதவிய குறிப்புகள்;
  • 1.Killing for caste honor -Viswanathan, Frontline 12 sept ,2003
  • 2.Vilupuram dist Chinna salem police station  cr.no. 587/2007 case
  • 3.Tirupur dist Madaththukulam police station cr.no. 628/2009 case
  • 4.Lata Singh vs State Of U.P. & Another on 7 July, 2006 - Indian Kanoon

வியாழன், 4 ஜூலை, 2013

நீதிபதியின் கைதும் ,கண்ணியமிக்க காவல்துறையும்

நீதிபதியின் கைதும் ,கண்ணியமிக்க காவல்துறையும்
(ச.பாலமுருகன்)

குன்னூர் நீதித்துறை நடுவராக இருந்த தங்கராஜ் மீது கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் போன்ற புகார்களை ஒரு பெண் உதவி ஆய்வாளர் கொடுத்ததும், நடுவர் கைது செய்யப்பட்டு உடனடியாக சிறைபடுத்தியது பல்லடம் அணைத்து மகளீர் காவல்துறை. சனிக்கிழமை மாலை கைது செய்தால் ஒரு நாள் கட்டாயம் சிறை வைக்கமுடியும் என போலீஸ் மூளை முடிவு செய்துள்ளது. இருபது ஆண்டுகளாக வழக்குரைஞர் பணி புரிந்து வருகின்றேன். பல தரப்பு வழக்குகளை சந்தித்து வருகின்றேன்.எத்தனையோ அபலை பெண்களுக்கு கடைசி நிமிடத்தில் கூட காவல் துறை அலட்சியம் செய்து உதவ முன் வராத பல கதைகள் தெரியும்.
நீதித்துறை நடுவருக்கும், பெண் உதவி ஆய்வாளருக்கும் நடுவே இருந்த காதல் உள்ளிட்ட விசயங்களை பேசுவதல்ல என் நோக்கம் . ஆனால் நபர்களைப் பொருத்து சட்டங்கள் வளைக்கப்படுவதை காண முடிகிறது.ஒரு பெண் ஒருவரிடன் மனைவியாக வாழ்ந்து பின் ,அவரை அந்த ஆண் திருமணம் செய்ய மறுத்தால்அந்த செயலுக்கு உச்சபட்ச தண்டனை 417 இந்திய சட்ட பிரிவு மட்டுமே .இது போன்ற பாதிக்கப்பட்ட சில பெண்களுக்காக நான் போராடி சில ஆண்களுக்கு தண்டனை வாங்கியும் தந்துள்ளேன். அது பிணையில் விடக்கூடிய ஒரு குறைந்த தண்டனை தரும் சட்டம். கற்பழிப்பு என்பது விருப்பமின்றி கட்டாயமாக அல்லது கொலை செய்து விடும் பயத்தை ஏற்படுத்தி உறவு கொள்வது இதுவே என் புரிதல்.

ஆனால் விருப்பப்பட்டு உறவு கொண்டாலும் அது நபரின் பதவி காவல் துறை செல்வாக்க் பொருத்து கற்பழிப்பு என கருதப்படும் என்ற புது விளக்கம் தற்போது பல்லடம் காவல்துறை நிரூபித்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த புகாரையும் ஒரு நீதிபதி படித்துவிட்டு மற்றொரு நீதிபதியை அடைப்பு காவல் செய்ததுதான்.

என் அனுபவத்தில் பல நீதிபதிகள் சட்டத்தில் உள்ளதை செய்வதை விட போலீஸ்காரர்களின் மனம் கோனாமல் நடப்பதற்கும், நமக்கென்ன என்று இயந்திர கதியில் போலீஸ்காரர்கள் முதல் தகவல் அறிக்கை எழுதி கைது செய்து அழைத்து வரும் எல்லோரையும் கண்னை மூடிக்கொண்டு சிறைபடுத்துவதும் நடக்கிறது. கடந்த ஆறு மாதத்திற்கு முன் ஒரு வழக்கில் ஒரு அரசு ஊழியரை மோசடி வழக்கில் கைது சிறையில் அடைத்தது காவல்துறை. அந்த தினம் ஒரு நண்பன் கேட்டுக்கொண்டதற்காக நான் வாதிட்டேன், காங்கிரஸ் கட்சி தலைவன் ஒருவரின் கடையில் தவனையில் வாங்கிய கம்பியூட்டருக்கு சில தவணைகள் பாக்கி வைத்து இருந்ததுதான் அந்த அரசு ஊழியர் செய்த மாபெரும் குற்றம். அதற்காக மோசடி குற்றத்துக்கு கைது செய்யப்பட்டிருந்தார். அரசு உழியர்கள் 24 மணி நேரத்துக்கு மேல் சிறைபடுத்தப்பட்டால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படலாம். நீதிபதியிடம் இது மோசடி குற்றமில்லை என்றும் கொடுக்கல், வாங்கல் சிவில் நீதிமன்ற பிரச்சனையென்றும் வாதிட்டேன். நீதிபதி என் கருத்தை கேட்பதாக இல்லை. சரி இடைக்காலமாக பெயில் கொடுங்கள் இல்லாவிட்டால் வேலை போய்விடும் என்றேன். மதியம் வந்து சொல்வதாக கூறிச்சென்றார் நீதிபதி. மதியம் வந்ததும் மீண்டும் வாதிட்டேன் நீதிபதியோ அவரின் செல்போனை எடுத்து வந்த ஒரு குறுஞ்செய்தியை பார்த்தார்.பின் அடுத்த கணமே என் பெயிலை டிஸ்மிஸ் செய்வதாக கூறி தள்ளுபடி செய்துவிட்டார். அரசியல்வாதி கடையில் தவனை பொருள் வாங்கியதற்காக என் கட்சிகாரனுக்கு அரசு வேலை போனதுதான் மிச்சம். அந்த நீதிபதி ஊழல் பேர்வழியல்ல ஆனால் ஒரு கோழை. நியாத்தை கூட நியாயமாக பார்த்தால் போலீஸ் கோபத்துக்கு ஆளாகவேண்டி வரும் என கருதியிருக்க கூடும்.

அதே சமயம் இன்னொரு நிகழ்வினையும் நான் பகிர்ந்தாக வேண்டும். கருனாநிதி முதல்வராக இருந்த சமயம் 2009 ல் ஈழபோர் நடக்கும் போது அவரை தினமணி கேலிசித்திரம் வரைந்திருந்தது. அந்த ஓவியத்தை பிளக்ஸ் போர்டு வைத்தற்காக அனுமதியின்றி தட்டி வைத்தல் உள்ளிட்ட சில பிரிவுகளுடன் 153 A IPC என்ற பிரிவில் வழக்கு தாக்கல் செய்து ஈழ ஆதரவு நாண்பர்கள் சிறைபடுத்த திருச்சங்கோட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். ஒரு பெண் நீதிபதி அங்கிருந்தார்.அந்த சமயம் நான் கருத்துரிமையின் முக்கியத்துவம் குறித்தும் அரசியல் தலைவரை விமர்ச்சிப்பது சனநாயக உரிமை என்று பேசினேன்,அடுத்த நிமிடமே அந்த நீதிபதி 153 A என்ற Non baillable offence தவிர மற்ற பிரிவுக்கு சிறை படுத்த உத்திரவிட்டார். மற்ற பிரிவுகளோ சிறு குற்றப்பிரிவுகள் அடுத்த நிமிடமே தோழர்கள் விடுதலை ஆனார்கள். சட்டத்தையும் நியாயங்களையும் புரிந்து பரிகாரம் செய்த அந்த நீதிபதி அம்மா இன்னமும் என் நினைவில் மதிப்புடன் உள்ளார்.

ஆக இயந்திர கதியில் சிறைபடுத்தல், நமக்கு ஏன் வம்பு ? , தன் வேலையினை தக்கவைத்தால் போதும் , சிறைபடுபவனின் உரிமைகளைப்பற்றி என்ன கவலை , இந்த கருத்தாக்கம் நீதிபதிகள் மத்தியில் உள்ளது. ஒரு பாதுகாப்பற்ற மனநிலையிலேயே பலர் பணி புரிகின்றனர். எனவே சட்டத்தின் அதிகாரங்களை பார்க்க அவர்கள் தயாராக இல்லை.

நீதிதுறை நடுவர் தங்கராஜுக்கு நற்சான்றிதழ் தருவதல்ல நம் நோக்கம். ஆனால் அந்த குறிப்பிட்ட நீதிபதியின் தீண்டத்தாகாத சாதி ,ஏழ்மை, பின் புலம் போன்றவை இந்த காதல், திருமண மறுப்பு உள்ளிட்ட தொடர் நிகழ்வில் மிகப்பெரிய பங்காற்றி உள்ளதை புறக்கணிக்க முடியாது. அதே சமயம் வேறொரு வழக்கில் போலீஸ் உயர் அதிகாரியாக ஐ.பி.எஸ் தேர்வு பெற்ற ஒருவர் ஒரு பெண்னை காதலித்து பழகி பின் திருமணம் செய்யாது தவிர்த்த சில வழக்குகள் ஊடகங்களில் அறிய முடிகிறது. அதில் ஒரு போலிஸ்காரரையும், போலீசார் கைது செயவில்லை. கோவையில் ஆனந்தீஸ்வரன் என்ற வழக்குரைஞரை துடியலூர் காவல்நிலையத்தில் வைத்து கொலை வெறியுடன் தாக்கினர். போலீஸ்காரர்கள் மற்ற சம்மந்தப்பட்டபோலீஸ்காரகள் மீது 307 IPC பிரிவில் கொலை முயற்சி வழக்கு போட்டனர். சம்மந்தப்பட்ட போலீசாரை கைது செய்யக்கோரி வழக்குரைஞர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை 15 நாட்கள் இரவு பகலாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசரின் சுண்டு விரலைக்கூட அசைக்க முடியவில்லை. போலீசார் சட்டத்திற்க்கு அப்பாற்பட்டவர்கள் ,அவர்களுக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதாக நிரூபித்துள்ளனர். "நீ செய்தால் கொலை நான் செய்தால் என்கவுண்டர்" என்று வெக்கங்கெட்டு சினிமா வசனம் பேசும் மாநிலம் இது.

திருமணம் செய்ததாக்கூறி நம்ம செய்து காதலித்த பெண்னுடன் உறவு கொண்டு பின் திருமணம் செய்யாமல் போவது இந்திய தண்டனை சட்டத்தில் பிரிவு 417 ல் மோசடி குற்றம் . ஆனால் புகார்தாரர் காவல்துறையினை சார்ந்தவர் என்பதற்காக அது கற்பழிப்பு குற்றமாக மாறியது மகா ஆச்சர்யம். அதைவிட ஆச்சர்யம் எந்த கவலையுமின்றி சட்டமாவது, விட்டமாவது என்ற பாணியில் சக நீதிபதியையே இயந்திரகதியில் சிறைபடுத்திய மற்றொரு நீதிபதி.

கடந்த 1989 ஆம் வருடம் இதே போன்று நீதிபதி கைது செய்யப்பட்ட சமயம் நமது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் (Delhi judicial service association Tis Hazari court Delhi vs state of Gujarath and others 1989 SC ) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் நீதிபதிகளை கைது செய்யவேண்டிய சூழலில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தி அதன் படி நீதிபதிகளை பேருக்கு கைது செய்யலாமே தவிர சிறைபடுத்தக்கூடாது. மேலும் மாவட்ட நீதிபதியின் உத்தரவின்றி காவல்நிலையம் கொண்டுபோகக்கூடாது.இவை எதுவும் பின் பற்றியதாக தெரியவில்லை. நமது நீதித்துறையினர் சிறைபடுத்தலில் உள்ள தங்களின் சட்டம் சார்ந்த சீர் தூக்கி பார்த்து முடிவு செய்யும் அதிகாரத்தை (discretionary power) இழந்து விட்டார்கள் என்பதன் வெளிப்பாடு. 1994 ஆம் வருடம் ஜோகீந்தர் குமார் என்ற இளம் வழக்குரைஞர் கைது செய்யப்பட்ட வழக்கில் (Joginda kumar Vs state of U.P ,crlj 1994 page 1981)உச்சநீதிமன்றம் தேவையற்ற கைதுகளை தவிர்க்க உத்திரவிட்டது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த உடன் சம்மந்தப்பட்ட ஆட்களை கைது செய்யவேண்டிய அவசியமில்லை என கூறியது. நமது சிறையில் உள்ள ரிமாண்டு கைதிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் தேவையற்ற கைதுகளால் சிறைபடுத்தப்பட்டவர்கள். ஒரு கைது என்பதன் தேவை குற்றம் கொடியதாகவோ அல்லது சாட்சியத்தை கலைப்பதாகவோ, புலனாய்வுக்கு இடையூராக இருந்தால் மட்டுமே செய்யப்படவேண்டும்.ஆனால் எப்.ஐ.ஆர் என்ற பெயரில் வெள்ளைப்பேப்பரை காவல்துறை கருப்பாக்கினாலே ,கைது சிறை என்பதுதான் தற்போதைய நடைமுறை.

ஒரு நீதிபதியை கைது செய்ததன் மூலம் நமது சமுகத்தில் காவல்துறை எவ்வாறு தனது அதிகார துர்பிரயோகத்தை செய்து வருகின்றது என்பது வெளிச்சமாக்கி உள்ளது. என் கவலையெல்லாம் கீழமை நீதித்துறை சட்டம் சார்ந்து சுதந்திரமாக இயங்கவேண்டும் என்பதுதான்.
Photo: நீதிபதியின் கைதும் ,கண்ணியமிக்க காவல்துறையும் 

சனி, 29 ஜூன், 2013

குழந்தைகளுக்கு தீங்கிழைத்தலை தடுத்தல்

(ச.பாலமுருகன்)

பள்ளி சூழல்களில் தொடர்ந்து பிரச்சனையாகி வரும் குழந்தைகள் மீதான பாலியல் பாதிப்பு புகார் காரணமாகவோ அல்லது அந்த பிரச்சனையினை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்றோ , தமிழக அரசு கடந்த  28.5.2013 தேதிய பள்ளி கல்வித்துறை சார்ந்த அரசானையில் , தமிழகத்தில் பெண்கள் பள்ளிகளுக்கு ஆண் ஆசிரியர்களை நியமிப்பதில்லை என முடிவெடுத்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு எந்த விதமான  தீர்வினை குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை தடுப்புக்கு  தந்துவிடப்போகின்றது என்பது ஒரு பெருத்த கேள்வியாக உருவாகியுள்ளது. பள்ளிகளுக்கு ஆண் ஆசிரியர்களை நியமிக்க மறுப்பதன் முலம் பிரச்சனையினை தீர்த்துவிட முயலும் அரசு, பள்ளிக்கு வெளியில் நடைபெறும் வன்முறைகளுக்கு என்ன தீர்வினை சொல்லப்போகின்றது.
சமூகத்தில்  பள்ளிகள் தனித்து இருப்பதில்லை. பள்ளிகளுக்கென பிரத்தியோக ஒழுக்க விழுமியங்கள் உருவாகிவிடுவதுமில்லை. பள்ளியில் நிகழும் வன்செயல்கள் சமூகத்தில் நிகழும் குழந்தைகள் மீதான வன்முறையின் ஒரு நீட்சியே., நமது சமூகத்தின் எல்லா பக்கங்களிலும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது இந்தியா போன்ற சுமார் 430 மில்லியன் உள்ள நட்டில்  சுமார் ஐந்தில்  ஒருவர் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள்.  கடந்த 2005 ஆண்டு துளிர் ,சேவ் சில்ரன் (save children),  Centre for healing and preventive child sexual abuse அகிய தன்னார்வ தொண்டு அமைப்புக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் , பல்வேறு பொருளாதார பின் புலத்தில் உள்ள மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் ஆண் குழந்தகள் 48% பேரும், பெண் குழந்தைகள் 39% பேரும் பாலியல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டது. சுமார் 72% குழந்தைகள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் வன்செயல்களைப்பற்றி வெளிப்படுத்தவில்லை என்பதையும் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மெளனமே குழந்தைகளை பாலியல்  பாதிப்புக்கு உள்ளாக்குபவர்களுக்கு  பாதுகாப்பாக உள்ளது. பொதுவாக குழந்தைகள் வெளிப்படுத்துவதில்லை என்பதாலேயே திரும்பத்திரும்ப பாதிப்பை தைரியமக செய்யும் நிலை உள்ளது. இதில் வேடிக்கை என்ன வென்றால் குழந்தைகளை இந்த பாதிப்புக்குள்ளாக்குபவர்களில் பெரும்பாலானோர் அந்த குழந்தைகள் நன்கு அறிந்த நபர்கள். வீட்டிலோ அல்லது வீட்டுக்கு அருகிலோ , பள்ளிப்பகுதிகளிலோ வேறு விளையாரும் இடங்களிலோ இந்த  நபர்களை குழந்தைகள் எதிர்கொள்கின்றனர். பாலியல் பாதிப்பென்பது பெண் குழந்தைகளுக்கு மட்டும் நிகழக்கூடிய ஒன்று  அதுவும் ஆண் மூலம் மட்டுமே அது நிகழக்கூடியது என்ற ஒரு பழமையான மூட நம்பிக்கைக்கு அரசும் விதி விலக்காக இல்லை.
 கடந்த 2013 பிப்ரவரி மாதம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்செயலுக்கு எதிராக பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த கோயமுத்தூர் குற்றவியல் வழக்குரைஞர் சங்கம் முடிவு செய்திருந்தது. இப் பிரச்சாரத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்ட ஆர்வமுள்ள இருபாலர் வழக்குரைஞர்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பாதிப்பு மற்றும் தற்காத்துக்கொள்வதற்கான முறை குறித்து முதலில் பயிற்றுவிக்கப்பட்டது. ஏனெனில் குழந்தைகளிடம் சென்று பேசுவது என்பதே ஒரு சவால் ,அதிலும் பாலியல் வன்முறையிலிருந்து தற்காத்து கொள்வது குறித்து பேசுவது பெரும் சவால் என்று உணரப்பட்டது. குழந்தைகளுடன் தொடர்ந்து பணிபுரிந்து வரும்  சைல்ட் லைன்(Child line) போன்ற அமைப்புக்களின் நிர்வாகிகள் வழக்குரைஞர்களிடம் தங்களின்  அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.குழந்தைகளின் மனநிலை குறித்தும், அவர்களிடம் எப்படி பேசலாம் என்பது குறித்தும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கூறினர்.   தேசிய மனித உரிமை ஆணையத்தின் குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு குறித்த கையேடு  மற்றும் குழந்தைகளின் உரிமைகள் குறித்து வெளிவந்த பல்வேறு உரிமை சார் அமைப்புகளின் வழிகாட்டுதலகள் பள்ளிகளுக்கு சென்று பேசப்போகும்  வழக்குரைஞர்களுக்கு தரப்பட்டது. முதலில் ஆர்வமாக பலர் முன் வந்த போதும் இந்த சொற்பொழிவு இவ்வளவு கடினமானதா என கருதியதாலேயோ என்னவோ பலர் பின் தங்கினர். இறுதியில்  பேசுவதில் ஆர்வமுள்ளவர்கள் , உரிமை சார் செயல்பாட்டாளர்கள், மனித உரிமையில் அக்கறை உள்ளவர்கள் என சுமார் 30 பேர் தங்களை தயார் படுத்திக்கொண்டனர் . அவர்களுடன் துணையாக செல்பவர்கள் என இன்னொரு 30 பேர் முன் வந்தார்கள்  கோவை மாவட்ட கல்வி அதிகாரிகளின்  அனுமதியும் பெறப்பட்டது.அதன் பின் கோவையின் சுற்றுப்பகுதியில்  அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என வழக்குரைஞர்கள் பிரிந்து சென்று மாணவர்களிடம் பேச சென்றார்கள். அந்த சமயம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு அட்டவனை அறிவிக்கப்பட்டிருந்ததால்  6 முதல் 9 வகுப்பு மாணவர்களே பெரும்பாலும்  பள்ளிகளில் விழிப்புணர்வு கருத்தை கேட்க அமரவைக்கப்பட்டனர். மாணவர்களிடம் ஒரு சொற்பொழிவு பாணியில்  பேசினால் அவர்கள் எளிதில் சோர்வடைந்துவிடக்கூடும் என்பதால் ஒரு உரையாடல் வடிவில் பேச்சை கட்டமைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது.
"மாணவர்களே குழந்தைகளுக்கு பாலியல் பாதிப்பை , தீங்கை ஏறபடுத்துவது என்றால் என்ன என தெரியுமா?" என தயங்கியபடியே பேசுபவர் கேட்டபோது குழந்தைகளோ
 "குழந்தைகளை கெடுப்பதுதானே? "என கத்தினர். ஊடகங்கள் நமது உரையாடலை எளிமையாக்கி விட்டது.
" குழந்தைகளை யார் கெடுப்பார்கள்? " என அடுத்த கேள்வியினை கேட்டபோது  அவர்கள் பெரும்பாலான பள்ளிகளில் சொன்ன ஒரே மாதிரி பதில்
" தீவிரவாதிகள்,பயங்கரவாதிகள், திருடர்கள்,கொள்ளைக்காரர்கள்"
இதுவும் ஊடகங்கள் வழி பதியப்பட்ட செய்தியாகவே அறிய முடிந்தது. அந்த பதிலின் தொடர்ச்சியாக பேசுபவர்

" இல்லை , உங்களுக்கு கெடுதல் செய்பவர் கெடுப்பவர் தோற்றத்துக்க் அவ்வளவு கொடூரமானவரில்லை அவர் உங்களுக்கு நன்கு அறிமுகமான நபராக இருக்கக்கூடும்"

 என அந்த  பாலியல் வன்முறையிலிருந்து குழதைகளை தற்காத்துக்கொள்ளும் விழிப்புணர்வு  பயிற்சி தொடங்குவது வழக்கமாக இருந்தது . உலகம் முழுதும் குழந்தைகளின் பாலியல் வன்முறை தடுப்பு பால பாடமான" நல்ல தொடுதல், கெட்டதொடுதல்" மற்றும் பாலியல்  பாதிப்பு நிகழும் போது அதை மறைத்து வைக்காமல் மற்றவரிடம் பேசுதல் , உதவி கோருதல் .  குழந்தைகளின் உடல் பிரத்தியோகமானது அதை பிறர் தேவையின்றி தொட அனுமதிக்க கூடாது என பல்வேறு சின்ன சின்ன தகவல்களுடன் சுமார் ஒரு மணிநேர பேச்சு கட்டமைக்கப்பட்டது. கோவையினை சுற்றி உள்ள 60 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் பரிட்சை நடப்பதாகவும் , மாணவர்கள் படித்துக்கொண்டிருப்பதாகவும்  ,சாக்கு போக்கு கூறி  தயங்கிய  ஒரு சில ஆசிரியர்கள் கூட இறுதியில் இப் பிரச்சாரத்தை வரவேற்றனர். தங்களால் வெளிப்படையாக பேச முடியாததை வழக்குரைஞர்களின் உரையாடல் பேசிவிட்டது என சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த அனுபவத்தில் ஒன்று வெளிப்படையாக தெரியவந்தது . அது , இது வரை அரசு பாலியல் தீங்கிழைத்தல் தடுப்பு கல்வியினை மாணவர்களுக்கும் கொண்டு செல்லவில்லை என்பதும்,ஆசிரியர்களிடமும் கொண்டு செல்லவில்லை என்பதும் புலப்பட்டது.. குழந்தைகளை எவ்விதம் மதிப்பது. குழந்தைகளின் உரிமைகள், அவர்களின் கண்ணியம் , மரியாதை மற்றும் அவர்களுக்கு எதிராக சித்தரவதையோ ,தண்டனையோ தடைசெய்யப்பட்டது என்ற ஆழமான கருத்து கல்வி மையங்களில் கொண்டு சேர்க்கப்படவில்லை. பாலியல் சீண்டல்களை அதன் அறிகுறிகளை அறிதல் என்பது அந்த பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள உள்ள முதல் அடிப்படை அலகாகும்.இந்த அனுபவம் பள்ளிகளுக்க் சென்றடையவில்லை. வழக்குரைஞர்கள் பள்ளிகளில் சென்ற் பேசுவதால் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்க ஆசிரியர் பற்றிய எதிரான கருத்துக்களை வெளிப்படுத்துவதில்லை என முடிவு செய்திருந்தனர். ஆசிரியர்களின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மட்டுமே பேசினர்.  ஆசிரியர்கள் நிச்சயம் பள்ளிகளில் பாலியல் பாதிப்புக்களை தடுக்க ஆக்கப்பூர்வமான பங்காற்றக்கூடிய சக்திகள் அவர்களை எதிர்மறையாக நிறுத்ததேவையில்லை என்ற முடிவு சாதகமான பலன் தந்தது.
ஆக பிரச்சனை ஆசிரியர் ஆணாக இருக்கின்றார் அல்லது பெண்னாக இருக்கின்றார் என யோசிப்ப்பதில் இல்லை. குழந்தைகளின் உரிமைகள் மற்றும் குழந்தைகளை நடத்துவது குறித்த விழிப்புணர்வை அறியச்செய்தல்,  குழந்தைகள்  பாதுகாப்பு சட்ட நிலைகளைப் பற்றி விவாதித்தல்,பாலியல் தீங்கிழைத்தலில் ஆசிரியரை பாதுகாவலர் நிலையில் வைத்தல் ஆகியவற்றில்  உள்ளது. பள்ளிகளுக்கு சென்று வளர் பருவ மாணவர்களை   நேரிடையாக சந்தித்த கள அனுபவம் மூலம் ஒன்றை உறுதியாக கூறமுடியும். குழந்தைகள் நாம் பொது புத்தியில்  நினைத்துக்கொண்டிருப்பது போல  அவ்வளவு அறியாமையில்,வெகுளிகளாக  இல்லை.அவர்களுக்கு நல்லது கெட்டது தெரிகிறது.அவர்களுக்கு நாம் நல்ல வழிகாட்டுதல்களை செய்யமுடியும்.  அவர்கள் பள்ளிகளில், பிற சூழல்களில் ஒரு அரோக்கியமான சூழலை உருவாக்ககூடிய சக்திகள்.  நமது வீடுகளில் கூட நாம் இந்த  பாலியல் தீங்கிழைத்தல் தடுப்பு மற்றும் தக்காத்துக்கொள்ளும் விவாதங்களை முன்னெடுக்க விரும்புவதில்லை. நமது மெளனம் ஆயிரமாயிரம் கால பழமைவாதத்தின் வழி உருவானது. தீங்கிழைப்பவர்கள் இதனையே தங்களுக்கு சாதகமாக கருதுகின்றனர். அரசும் கல்வி சூழலில் இந்த மெளனத்தை விரும்புகின்றது. எனவே அரசு பெண் குழந்தைகள் பள்ளிகளில் ஆண் ஆசிரியரை நியமிப்பதில்லை என தீர்வற்ற ஒன்றை தீர்வு என கருதுகின்றது. நாம் எல்லோரும்  ஒரு திறந்த விவாதத்தை  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தீங்கிழைத்தலுக்கு எதிராக எழுப்புவோம். நமது குழந்தைகளுக்கு சொல்லுவோம்.  இப் பிரச்சனையில் முக்கியமாக இருகிப்போய் கெட்டித்து உள்ள மெளனத்தை உடைப்போம்.
ஒரு ஆரோக்கியமான,பாதுகாப்பான உலகினை குழந்தைகளுக்கு சமைப்போம்.
Shanmugam Balamurugan <balamuruganpucl@gmail.com>
2:49 AM (4 minutes ago)

to PUCL

செவ்வாய், 25 ஜூன், 2013

நெருக்கடி நிலை நாள்
(ச.பாலமுருகன்)

ஜீன் மாதம் 26 ஆம் தேதி இந்திய சனநாயக வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு நாள். 1975 ஆம் ஆண்டு அந்த நாளில் இந்தியாவின் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி நமது நாட்டின் உள் நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளதாக கூறி அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவுக்கு நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டினார். தலையாட்டி பொம்மையான ஜனாதிபதியும் நெருக்கடி நிலையினை பிறப்பித்தார். அந் நாளிலிருந்து அடிப்படை உரிமை மறுக்கப்பட்ட நாட்டின் குடி மகன் உச்சந்நிதிமன்றத்தின் கதவுகளை தட்டும் சிவில் உரிமை பறிக்கப்பட்டது. சட்டவிரோதமாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் தங்களின் மனித உரிமை மீறப்பட்டதாக நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனு Heabus corpus தாக்கல் செய்யும் உரிமையினை இழந்தனர்.எல்லா அதிகாரமும் பிரதமர்இந்திரா, அவரின் காங்கிரஸ் கட்சியின் கைவசமானது. இந்திய வரலாற்றில் ஒரு மோசமான சர்வாதிகார ஆட்சி அன்று உதயமானது.

1971 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்திராகாந்தி அரசு இயந்திரத்தை தவறாக ,தனக்கு சாதகமாக பயன்படுத்தி , தேர்தல் முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றார் என குற்றம் சாட்டப்பட்டது. ராஜ் நாராயணன் இந்திராகாந்தியின் தேர்தல் வெற்றியினை அலகபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து எதிர்த்திருந்தார். State of Uttar Pradesh v. Raj Narain அந்த வழக்கில் 1975 ஆண்டு ஜீன் 12 ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜக்மோகன்சிங்கா வழந்கிய தீர்ப்ப்பில் பிரதமர் இந்திராகாந்தி தேர்தல் முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றதாகவும் அதற்காக 6 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிருவது தடை செய்வாதாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. நாடுமுழுதும் ஏற்கனவே இருந்த வறுமை ,வேலையில்லா திண்டாட்டம் கூடவே இந்திராகாந்தியின் சர்வாதிகாரப்போக்குக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றோர் மேற்கொண்டுவந்த சனநாயக மீட்பு போராட்டங்கள் இந்த பின்னணியில் இந்திராகாந்தியின் தேர்தல் செல்ல்லாது மற்றும் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தடையிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள நெருக்கடி நிலை பிரகடணம் முலம் தன்னை ஒரு சர்வாதிகாரியாக நிறுத்திக்கொண்டார் இந்திராகாந்தி.நமது அரசியலமைப்புச்சட்டத்தின் பிரிவு 352 படிநாட்டின் பாதுகாப்புக்க் அச்சுறுத்தல் ஏற்படும் போர் சூழலில் இந்த நெருக்கடி நிலையினை பிறப்பிக்க முடியும் பிரதமரின் வேண்டுகோளினை ஏற்று மத்திய அமைச்சரவை க்டியரசு தலைவருக்கு இதனை நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கும். குடியரசுத்தலைவர் நெருக்கடி நிலையினை பிறப்பித்த பின் ஒரு மாத்தத்தில் பாராளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினரின் ஒப்புதலை பெறவேண்டும் இது ஆறு மாதம் நடைமுறையில் இருக்கும்.

நெருக்கடி நிலை பிறப்பிக்கபட்டவுடன் இந்திராகாந்திக்கு எதிரான எல்லா அரசியல் கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொராஜி தேசாய், உள்ளிட்ட பல தலைவர்களும் தமிழகத்தில் தி.மு.க கட்சியினரும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினை சார்ந்தோரும் , நக்சல்பாரி இயக்கத்தவர் என பல பொதுவுடமை செயல்பாட்டாளர்களும் சிறை, சித்திரவதை என பாதிப்புகளை எதிர்கொண்டனர். அந் நாட்களில் சிறைகளில் நடந்தேறிய கொடுமைகளுக்கு சாட்சியமாக சிட்டி பாபுவின் சிறை குறிப்பு, தியாகுவின் சிறைக்குள் சித்திரங்கள் உள்ளிட்ட தமிழ் சிறை பதிவுகளும், ஆங்கிலத்தில் மேரி டைலரி ன் இந்திய சிறையில் என் நாட்கள் My days in indian prison ,மற்றும் அன்றைய ஐ.ஏ.எஸ் அதிகாரியான M.G தேவசகாயம் அவர்களின் JP in jail an uncensored accountஉள்ளிட்ட பதிவுகள் உள்ளன.

சட்டத்தின் ஆட்சி (rule of law )என்பதற்கு பதிலாக இந்திராவின் உத்திரவு படி ஆட்சி (rule of decree) என்ற நிலை உருவானது.பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டினர். நாட்டின் ஒன்பதுக்க்ம் மேற்பட்ட உயர்நீதிமன்றங்கள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை அரசு நெருக்கடி நிலையினை சொல்லி எடுக்கமுடியாது என தீர்ப்பு வழங்கியது. எனினும் உச்சநீதி மன்றத்திற்கு இந்த வழக்குகள் கொண்டு செல்லப்பட்ட போது,சிறைபடுத்தப்பட்ட மக்களுக்கு தனி மனித சுதந்திரம் உள்ளதா என்ற விவாதத்தை துவக்கிய சிவகாந் சுக்லாவின் Additional District Magistrate of Jabalpur v. Shiv Kant Shukla என்ற வழக்கில் இந்திய உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் பி.என்.பகவதி,சந்திரசூட்,பெக்,ரே மற்றும் கண்னா அடங்கிய பெஞ்ச்சின் தீர்ப்பில் நீதிபதி கணாவை தவிர நான்கு நீதிபதிகள் நெருக்கடி நிலையில் சிறைபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அதனை பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யமுடியாது எனவும் தீர்ப்பு வழங்கியது. அதில் மாறுபட்ட நீதிபதி கண்னா தனது சிறுபான்மை தீர்ப்பில் " இந்திய அரசிலைமப்பு என்பது வெற்று காகிதமல்ல அது நமது முந்தைய தலைமுறையின் தியாகத்தின் பலன்.மக்களே உண்மையான ஆட்சியாளர்கள் , எதோசர்வாதிகார சக்திகளின் கைகளில் மக்களின் உரிமையினை விட்டுத்தர முடியாது , விசாரணையினறி யாரையும் அரசு சிறையில் வைத்துக்கொள்ள முடியாது" என்றார். அவர் தனது மாறுபட்ட கருத்தை அவருக்கு நியமாக பணி முப்பின் அடிப்படியில் கிடைக்கவேண்டிய உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதி பதவியினை விலையாக கொடுத்த்ள்ளதாக அவரின் சகோதரியிடம் வெளிப்படுத்தினார். அந் நாளில் அவர்தான் நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக வரும் பணி முப்பு தகுதியுடனிருந்தார்.அவர் அய்யப்பட்டது போன்றே போன்று 1977 ல் இந்திரா காந்தி, அது வரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு கடைபிடித்துவந்த சீனியாரிட்டி முறையினை புறந்தள்ளி விட்டு இளைய நீதிபதியான எம்.ஹெச். பெக் தலைமை நீதிபதியாக மாற வழிவகை செய்தார். நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்த அளவு ஆள்பவர்கள் நெருக்கடி நிலையில் செல்வாக்கு செலுத்தினர் என்பதற்க்கு இது ஓர் உதாரணம்.

மேலும் குடும்ப கட்டுப்பாடு திட்டம் என்ற பெயரில் நாடு முழுதும் 83 லட்சம் மக்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு முந்தைய வருடம் 23 லட்சம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாட்டில் இந்த அதீத எண்ணிக்கை கட்டாய கருத்தடை செயல் திட்டங்களினால் உருவானது.இருபதம்ச திட்டம் என்ற பெயரில் அரசு உடகங்களில் இந்திரகாந்தி தனனை இந்த நாட்டின் விடிவெள்ளி என சுயதம்பட்டம் அடித்துக்கொண்டார். மறு புறம் நாடு முழுதும் அதிகார வர்க்கம் மற்றும் காவல்துறையின் சித்தரவதை ,மோதல் சாவுகள் தொடர்ந்தது. கேரளாவின் புகழ் பெற்ற வழக்கான பொறியியல் கல்லூரி மாணவர் ராஜன் போன்றோரின் கொலை, பீகாரின் பகல்புர் சிறையில்30 க்கும் மேற்பட்ட கைதிகளின் கண்களை பிடுங்கி ஆசிட் உற்றிய கொடுமை , சிறையில் துப்பாக்கி சூடு என அது நீண்டது. நாட்டின் பல பகுதிகளில் இளைஞர்கள் நக்சலைட் என்ற பெயரில் வேட்டையாடப்பட்டனர்.

இந்திய மக்களின் தன்னலமில்லா சிவில் வீரமிக்க போராட்டத்தால் 1977 மார்ச் மாதம் 23 தேதி நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் இந்திஅ அரசியலில் சிவில் உரிமை பேசுவதற்க் உள்ள வெற்றிடத்தைப்போக்க மக்கள் சிவில் உரிமைக்கழகம் உருவானது. சநாக சமூகத்தில் அதனை பாதுகாக்க , உரிமைகளை தக்கவைத்த்க்கொள்ள நாம் விழிப்ப்டனிருக்கவேண்டிய நேரமிது. அரசிலைமைப்புச் சட்டங்கள் இந்த நாட்டு குடிமக்களுக்கு வழங்கிய சமூக பாதுகாப்புகளான மாநிலங்களின் வழிகாட்டு நெறிமுறைகள், அடிப்படை உரிமைகள் என எல்லா பாதுகாப்ப் அரண்களையும் கடந்த 1990 களுக்கு பின் வந்த நவீன தாராளமயக்கொள்கை தகர்க்க துணிந்து விட்டது. அரசியலைப்பின் வழி நாடு நடிபோடாது உலகில் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார கொள்கைக் ஏற்ப ஆட்சி நடைபெறத்துவங்கி விட்டது. நெருக்கடி நிலையினை விட கொடுமை மிக்க பல சட்டங்கள் ஏழை எளிய பழங்குடி மக்கள் மீது பாய்கின்றது. கருத்துரிமை ,அரசின் கொள்கைகளுக்கு மாற்று கருத்து கொள்ளுதல் உள்ளிட்ட பல சனநாயக விழுமியங்கள் பாதிப்புக்குள்ளாகும் காலகட்டம் நடைபெறுகிறது. சொந்த மக்களின் மீது இந்திய அரசு போர் தொடுக்க முடியாது என அரசியலமைப்பு உறுதி செய்த போதிலும் , இராணுவ விமானங்களை பழங்குடி பயன் படுத்த ஒரு புறம் ஆதரவு திரட்டும் வேலைகளை பன்னாட்டு கம்பெனிகள் செய்கின்றன.

ஆக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உருவாகியுள்ள காலகட்டங்களில் சனநாயக மீட்பு என்ற உன்னத லட்சியங்களை உயர்த்தி பிடிப்பதே ,நாட்டின் சுதந்திரத்திக்கு நாம் செய்யும் பாதுகாப்பாகும்.எளிய , ஏழை மக்களை இந்த சனநாயக நீரோட்டத்தில் பங்கேற்க செய்வது ஒன்றே நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும். நாடு மக்களால் ஆளப்படுவது. மக்களை பாதுகாக்கவே காவல் அமைப்புகள். ஆனால் முறனாக பன்னாட்டு ,இந்நாட்டு கம்பெனிகளின் நலனே நாட்டின் நலன் என்ற தடம் மாறிய நவீன தாரளமய கொள்கை மக்களை அவர்களின் எல்லா உயிர்வாழும் வளங்களிலிருந்தும் அப்புறப்படுத்துகின்றது. அதற்காக திருப்பத்திரும்ப நெருக்கடி நிலைகள் மறு உருவாக்கம் செயப்படுகின்றது.நாம் நெருக்கடி நிலை வடிவங்களை இடைவிடாது எதிர்ப்போம்.

நாம் சனநாயகம் காக்க எழவேண்டிய காலமிது.

(ஜீன் 26 நெருக்கடி நிலை எதிர்ப்பு நாள் மற்றும் உலக சித்தரவதை எதிர்ப்பு நாள்)