குழந்தைகளுக்கு தீங்கிழைத்தலை தடுத்தல்
(ச.பாலமுருகன்)
பள்ளி சூழல்களில் தொடர்ந்து பிரச்சனையாகி வரும் குழந்தைகள் மீதான பாலியல் பாதிப்பு புகார் காரணமாகவோ அல்லது அந்த பிரச்சனையினை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமென்றோ , தமிழக அரசு கடந்த 28.5.2013 தேதிய பள்ளி கல்வித்துறை சார்ந்த அரசானையில் , தமிழகத்தில் பெண்கள் பள்ளிகளுக்கு ஆண் ஆசிரியர்களை நியமிப்பதில்லை என முடிவெடுத்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு எந்த விதமான தீர்வினை குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை தடுப்புக்கு தந்துவிடப்போகின்றது என்பது ஒரு பெருத்த கேள்வியாக உருவாகியுள்ளது. பள்ளிகளுக்கு ஆண் ஆசிரியர்களை நியமிக்க மறுப்பதன் முலம் பிரச்சனையினை தீர்த்துவிட முயலும் அரசு, பள்ளிக்கு வெளியில் நடைபெறும் வன்முறைகளுக்கு என்ன தீர்வினை சொல்லப்போகின்றது.
சமூகத்தில் பள்ளிகள் தனித்து இருப்பதில்லை. பள்ளிகளுக்கென பிரத்தியோக ஒழுக்க விழுமியங்கள் உருவாகிவிடுவதுமில்லை. பள்ளியில் நிகழும் வன்செயல்கள் சமூகத்தில் நிகழும் குழந்தைகள் மீதான வன்முறையின் ஒரு நீட்சியே., நமது சமூகத்தின் எல்லா பக்கங்களிலும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது இந்தியா போன்ற சுமார் 430 மில்லியன் உள்ள நட்டில் சுமார் ஐந்தில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள். கடந்த 2005 ஆண்டு துளிர் ,சேவ் சில்ரன் (save children), Centre for healing and preventive child sexual abuse அகிய தன்னார்வ தொண்டு அமைப்புக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் , பல்வேறு பொருளாதார பின் புலத்தில் உள்ள மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் ஆண் குழந்தகள் 48% பேரும், பெண் குழந்தைகள் 39% பேரும் பாலியல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக கண்டறியப்பட்டது. சுமார் 72% குழந்தைகள் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் வன்செயல்களைப்பற்றி வெளிப்படுத்தவில்லை என்பதையும் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மெளனமே குழந்தைகளை பாலியல் பாதிப்புக்கு உள்ளாக்குபவர்களுக்கு பாதுகாப்பாக உள்ளது. பொதுவாக குழந்தைகள் வெளிப்படுத்துவதில்லை என்பதாலேயே திரும்பத்திரும்ப பாதிப்பை தைரியமக செய்யும் நிலை உள்ளது. இதில் வேடிக்கை என்ன வென்றால் குழந்தைகளை இந்த பாதிப்புக்குள்ளாக்குபவர்களில் பெரும்பாலானோர் அந்த குழந்தைகள் நன்கு அறிந்த நபர்கள். வீட்டிலோ அல்லது வீட்டுக்கு அருகிலோ , பள்ளிப்பகுதிகளிலோ வேறு விளையாரும் இடங்களிலோ இந்த நபர்களை குழந்தைகள் எதிர்கொள்கின்றனர். பாலியல் பாதிப்பென்பது பெண் குழந்தைகளுக்கு மட்டும் நிகழக்கூடிய ஒன்று அதுவும் ஆண் மூலம் மட்டுமே அது நிகழக்கூடியது என்ற ஒரு பழமையான மூட நம்பிக்கைக்கு அரசும் விதி விலக்காக இல்லை.
"மாணவர்களே குழந்தைகளுக்கு பாலியல் பாதிப்பை , தீங்கை ஏறபடுத்துவது என்றால் என்ன என தெரியுமா?" என தயங்கியபடியே பேசுபவர் கேட்டபோது குழந்தைகளோ
"குழந்தைகளை கெடுப்பதுதானே? "என கத்தினர். ஊடகங்கள் நமது உரையாடலை எளிமையாக்கி விட்டது.
" இல்லை , உங்களுக்கு கெடுதல் செய்பவர் கெடுப்பவர் தோற்றத்துக்க் அவ்வளவு கொடூரமானவரில்லை அவர் உங்களுக்கு நன்கு அறிமுகமான நபராக இருக்கக்கூடும்"
என அந்த பாலியல் வன்முறையிலிருந்து குழதைகளை தற்காத்துக்கொள்ளும் விழிப்புணர்வு பயிற்சி தொடங்குவது வழக்கமாக இருந்தது . உலகம் முழுதும் குழந்தைகளின் பாலியல் வன்முறை தடுப்பு பால பாடமான" நல்ல தொடுதல், கெட்டதொடுதல்" மற்றும் பாலியல் பாதிப்பு நிகழும் போது அதை மறைத்து வைக்காமல் மற்றவரிடம் பேசுதல் , உதவி கோருதல் . குழந்தைகளின் உடல் பிரத்தியோகமானது அதை பிறர் தேவையின்றி தொட அனுமதிக்க கூடாது என பல்வேறு சின்ன சின்ன தகவல்களுடன் சுமார் ஒரு மணிநேர பேச்சு கட்டமைக்கப்பட்டது. கோவையினை சுற்றி உள்ள 60 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் பரிட்சை நடப்பதாகவும் , மாணவர்கள் படித்துக்கொண்டிருப்பதாகவும் ,சாக்கு போக்கு கூறி தயங்கிய ஒரு சில ஆசிரியர்கள் கூட இறுதியில் இப் பிரச்சாரத்தை வரவேற்றனர். தங்களால் வெளிப்படையாக பேச முடியாததை வழக்குரைஞர்களின் உரையாடல் பேசிவிட்டது என சிலர் கருத்து தெரிவித்தனர்.
|
2:49 AM (4 minutes ago)
| |||
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக