வியாழன், 13 செப்டம்பர், 2018

ஏழு தமிழரின் விடுதலை
(ச.பாலமுருகன்)
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கான பயணம் கடந்த 27 ஆண்டுகளாய் தொடர்ந்துள்ளது. அற்புதம் அம்மாள் இப்போராட்ட்த்தில் முன்னோடியாக நின்று வருகின்றார். தமிழ் சமூகத்தின் பொது கருத்தாய் ஏழு பேரின் விடுதலை மாறியுள்ளது.
மத்திய அரசின் முழு சம்மத்துடன் மட்டுமே இவர்களின் விடுதலையை உறுதி செய்ய முடியும் என (consult means consent ) என்று வழங்கப்பட்ட முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்பானது மாநில அரசுக்கு அரசமைப்புச்சட்டம் வழங்கியுள்ள மன்னிக்கும் அதிகாரத்தை முழுதும் பறிக்கும் வகையில் இருந்தது. ஆனால் அந்த தீர்ப்பானது தற்போது உச்சநீதிமன்றம் மாற்றி ,மாநில அரசு தன் மன்னிக்கும் அதிகாரம் மூலம் ஆயுள் சிறைவாசிகளை விடுவிக்கலாம் என தெளிவு படுத்தியுள்ளது.
நமது அரசியலமைப்புச்சட்ட்த்தில் உள்ள மன்னிக்கும் அதிகாரம் அரசர்களுக்கு உள்ள மன்னிக்கும் அதிகாரத்தின் தொடர்ச்சியாகும். இந்திய அரசியலமைப்பு உருவாவதற்கு முன் இந்த அதிகாரம் 1935 ஆண்டு இந்திய சட்ட்த்தில் 295(1) பிரிவிலும் மற்றும் 402 A குற்றவியல் நடைமுறை சட்ட்த்திலும் கவர்னர் ஜெனரல் மற்றும் மாநில கவர்னருக்கு கொடுக்கப்பட்ட்து. ஆனால் இதில் கவர்னர் சிறியவர் ,கவர்னர் ஜெனரல் பெரியவர் என்று குறிப்பிடவில்லை. இந்திய அரசமைப்பு சட்டத்தில் இந்த மன்னிக்கும் (remission) அதிகாரம் மாநில கவர்னருக்கு பிரிவு 161 மற்றும் குடியரசுத்தலைவருக்கு 72 கீழ் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மாநில கவர்னரோ குடியரசுத்தலைவரோ தங்களின் சுய விருப்பு வெறுப்பு அடிப்படையில் எந்த முடிவும் எடுக்க அதிகாரம் இல்லை. மாநில ஆளுனர் மாநில அமைச்சரவை முடிவையும் , குடியரச்த்தலைவர் மத்திய அமைச்சரவை முடிவையும் நடைமுறைப்படுத்தவேண்டியவர்கள் மட்டுமே.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலையில் சட்டமன்றத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எடுத்த கொள்ளை முடிவான விடுதலை என்பதை ஆளும் ஆ.தி.மு.க ஆட்சி பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கின்றோம். ஆளுனர் மாநில அமைச்சரவையின் பரிந்துரையினை ஏற்று உடனே அவர்களை விடுவிக்க வேண்டுமே அன்றி அவருக்கென எந்த முடிவெடுக்கும் அதிகாரத்தையும் சட்டம் வழங்கவில்லை.பல உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இதனை உறுதி செய்துள்ளது. மேலும் சென்னை உயர்நீதினறத்தின் கீழ் கண்ட தீர்ப்பில் மேலும் தெளிவாக இதனை உறுதி செய்துள்ளது.
.
S.A.Miyajan vs Union Of India Represented By Its on 5 February, 2014) https://indiankanoon.org/doc/42178545/
( para 21)
மரண்தண்டனைக்கு எதிராக தமிழகம் எழுந்து நின்றதாலேயே ஏழு உயிர்கள் காப்பாற்றப்பட்ட்து.இருபத்தி ஏழு ஆண்டுகளுக்கு பின்னராவது குடும்பங்களுடன் ஒரு சராசரி வாழ்க்கை இவர்கள் வாழ தமிழக அரசு அதன் அமைச்சரவை மூலம் தனது பரிந்துரை வழியாக சிறைபட்டோருக்கு உதவ வேண்டும் .


2 கருத்துகள்:

  1. இன்று தான் இந்நாவலை வாசித்து முடித்தேன். என்னால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. ஏனெனில் சோளகர் தொட்டியில் காட்டை நம்பி வாழும் அம்மக்கள் நிலை அரசு அதிகாரிகள் இளைக்கும் கொடுமைகளும் சித்தரவதையும் என் மனம் கணத்து போய்விட்டது. அப்பெண்களுக்கு நேரும் கொடுமைகள் அதிகமான வலியைக் கொடுத்தது. போலீஸ்காரர்கள் வனவிலங்குகளை விட மோசமான விலங்குகள். ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை வாசித்து முடித்த போது ஏற்படும் வழியே விட பன்மடங்கு வழியே இந்நாவல் ஏற்படுத்தியது. சோளகர்களின் வாழ்க்கையை கனத்த இதயத்தோடு மு
    டிக்க முடிந்தது. கண்ணீர்ரோடு.......

    பதிலளிநீக்கு
  2. இன்று தான் இந்நாவலை வாசித்து முடித்தேன். என்னால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. ஏனெனில் சோளகர் தொட்டியில் காட்டை நம்பி வாழும் அம்மக்கள் நிலை அரசு அதிகாரிகள் இளைக்கும் கொடுமைகளும் சித்தரவதையும் என் மனம் கணத்து போய்விட்டது. அப்பெண்களுக்கு நேரும் கொடுமைகள் அதிகமான வலியைக் கொடுத்தது. போலீஸ்காரர்கள் வனவிலங்குகளை விட மோசமான விலங்குகள். ஜெயமோகனின் ஏழாம் உலகம் நாவலை வாசித்து முடித்த போது ஏற்படும் வழியே விட பன்மடங்கு வழியே இந்நாவல் ஏற்படுத்தியது. சோளகர்களின் வாழ்க்கையை கனத்த இதயத்தோடு மு
    டிக்க முடிந்தது. கண்ணீர்ரோடு.......

    பதிலளிநீக்கு