ஞாயிறு, 17 நவம்பர், 2013

 
 
வளங்களை மக்களுடமையாக்குவது
 (ச.பாலமுருகன்)
நாள் தோறும் புதுப்புது ஊழல்கள் குறித்த செய்திகளை நமது ஊடகங்கள் தாங்கி வருகின்றன. ஊழலில் தொடர்புடைய தொகைகள் ஆயிரக்கணக்கான கோடிகளைத் தாண்டுகின்றன. நிலக்கரி ஊழல் முதல் பல்வேறு கனிம வளங்களை தனியார் கம்பெனிகள் முன் எப்போதும் இல்லாத அளவு தங்களின் உடைமையாக  மாற்றியுள்ளது. அரசும் அதன் திட்டங்களும் வளர்ச்சி என்ற பெயரில் கம்பெனிகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் கொள்கை முடிவுகளை எடுத்து செயல்படுகின்றது. இதன் மறுபுறம்  இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பெரும் கிளர்ச்சியும் போராட்டமும் அமைதியின்மையும் எழுந்துள்ளது. தங்களின் மண் மீதான உரிமையினை காக்க எழுந்துள்ல போராட்டங்கள் தீவிரவாதிகள், வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலில் போராடுபவர்கள் அல்லது நாட்டின் நலனுக்கு எதிரானவர்கள் என்று பல்வேறு அடைமொழிகளைக்கொடுத்து அரசு அடக்க தனது காவல் மற்றும் ஆயுதப்படைகளை தயாராக்குகின்றது. கடுமையான சட்டங்கள் , சிறைப்படுத்தல்கள் மேலும் மோதல் சாவுகள் ,பொய் வழக்குகள் என நாடு ஒரு அமைதியின்மையினை எதிர்கொண்டு வருகின்றது. சட்டத்தையும் ஒழுங்கையும் காப்பது என்பது  எல்லா மாற்றுக்குரல்களையும் மெளன மாக்கி விடுவது என்ற அளவில் காவல்துறையின் புரிதல் உள்ளதால் சாதாரண ஆர்ப்பாட்டங்கள்  அல்லது பொதுக்கூட்டங்களுக்கு கூட உயர்நீதிம்ன்றம் போய் அனுமதி வாங்கி வரவேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. ஒரு புறம் விவசாயிகளின் போராட்டம் விளை நிலங்களை பிடுங்காதே என்ற முழக்கத்தில் நிகழ்கிறது, மறுபுறம் மீனவர்கள் கடலையும், கடற்கரையையும் காக்க தமிழகத்தின்  இடிந்தகரை உள்ளிட்ட எல்லா கடற்கரைகளிலும் ஏதேனும் ஒரு வகை போராட்டத்தை  அல்லது கோரிக்கையை வைத்து வருகின்றனர். மற்றொரு புறம் நாட்டின் எல்லா வனங்களிலிருந்தும் பழங்குடி மக்கள் விரட்டப்படுகின்றனர். இந்தியாவின் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் என பிரதமர் மன்மோகன் சிங் அறிவிக்கும் அளவு  அமைதியின்மை எழுந்துள்ளது, மக்கள் வாழ்வு  சீர்குலைக்கப்பட்டுள்ளது.  ஆக நிலம், வனம் ,கடல் என இந்த இயற்கை  வளங்களைச்சார்ந்து வாழும் எல்லா மக்களும் எதிர்கொள்ளும் வாழ்வாதார அச்சுறுத்தல்கள்  அளவில் மாறுபட்டிருந்த போதும் பொதுப்பண்பில் ஒன்றுபட்டவை. மக்களுக்கும் அவர்களின் வளங்களுக்கும் இடையே உள்ள உறவினை துண்டிக்க எடுக்கப்படும் எடுக்கப்படும் நடவடிக்கைகளே எல்லா போராட்டங்களுக்கும் காரணமாக உள்ளது.
நமது நாடு காலணியாதிக்கத்திற்கு உட்படும் வரை வளங்களின் மீதான  உரிமைகளை மக்களின் சமூகம் தங்களின் வசம் தக்கவைத்திருந்தது. காலணி ஆதிக்கம் அதனை தனது வசமாக்கவே சட்டங்களை இயற்றியது. ஒவ்வொரு சட்டமும் மக்களின் உரிமைகளை பறித்து  அதனை ஆங்கிலேய ஆட்சியாளர்கள் வசம் கொண்டு சென்றது. 1894 ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட  வனக்கொள்கைகள் மற்றும் 1927 இந்திய வனச்சட்டம் பழங்குடிகளின் தொன்மையான அனைத்து உரிமைகளைப்பறித்துவிட்டு ஆங்கிலேயர்களின் சலுகைகளில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டனர். வனங்கள் ஆங்கிலேய  அரசால் வனிகத்திற்கான ஒரு இடமாகப் பார்க்கப்பட்டது. இது போன்றே எல்லா வளங்களும் மக்கள் சமூகத்தின்  வசமிருந்து பிடுங்கப்பட்டு அது ஆங்கிலேய  ஆட்சியாள்ர்களின்   கைகளுக்கு கொண்டுவரப்பட்டது. தனியான சொத்துகள்  தவிர மற்றவை அனைத்தும் அரசுக்கு சொந்தமானது என்ற நிலை உருவானது. அரசு அதிகாரிகள் என்ற தனிநபர்கள் அவர்கள் ஏற்படுத்திய ஆவணங்களின் வடிவில் ஒருவருக்கு நிலம் அல்லது வளங்களின் மீதான உரிமை சொந்தமானதா  இல்லையா முடிவு செய்யும் நிலை உருவாக்கப்பட்டது.பழங்குடி மக்களின் பல்வேறு போராட்டங்களில் இதற்கு எதிரான போராட்டத்தை நடத்தினர்.ஆனாலும்  ஆக்கப்பட்ட பொருட்கள் அரசாங்கத்திற்க்கு சொந்தம் என்று அறியும் வகையில் , இயற்கை  வளங்களின் முழு கட்டுப்பாடும் அரசின் வசம் சென்றது. சமுகத்திற்கென வளங்கள் இல்லாமல் போனது. நாடு விடுதலை அடைந்த பின்பு ஜனநாயக பண்புகள் வளர்க்கப்பட்டு இயற்கை வளங்களை பயன்படுத்தும் முறை ஜனநாயகப்படுத்தப்படுவதற்கு பதிலாக ஆங்கிலேயர்களின்கொள்கைகளான வளங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் கொள்கை தொடர்ந்தது. முன்பு ஜமீந்தாரகளுக்கு மக்களின் நிலத்தை பிடுங்கி வழங்கிய அதே நிலை கார்பரேட் கம்பெனிகளுக்கு மண்ணையும் ,மலையையும் ,கடலையும் தாரைவார்ப்பது என்ற நிலைபாடு தொடர்ந்து நடைபெறுகின்றது. கடந்த 2011 ஆண்டு ஜக்பால சிங் /எதிர்/ பஞ்சாப் மாநில அரசு என்ற வழக்கில் நீதிபதி மார்க்கண்டேய கட்சு   கிராம சபைகளின்  பொது பயன்பாட்டு க்கு உட்பட்டிருந்த நிலங்களை  அது போன்ற பொது பயன்பாடு தவிர பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது என தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில்  பண்ணெடுங்காலமாக கிராம சமூகத்தின் பொது பயன்பாட்டுக்கு உள்ள நிலங்கள் மக்களின் நீர் ஆதாரங்கள், மேச்சல் ,வழிபாடு ,ஆன்மீகம் ,,சுடுகாடு என ப்ல்வேறு வகையில் பயன்பட்டு வருவதை சுட்டிக்காட்டினர்.ஆனால் அரசின் கொள்கைகள் சாமானிய மனிதனை நிலத்திலிருந்தும் எல்லாவகையான வளத்திலிருந்து துரத்தி ,அன்றாடம் நமது ரயில் நிலையங்களில் நாம் பார்க்கும் வேலை தேடி   பீகரிலிருந்தும், ஒரிஸ்ஸாவிலிருந்தும் ,மேற்கு வங்கத்திலிருந்தும் வரும் கூலிகளை உற்பத்தி செய்து வருகின்றது. இந்த உரிமைகளற்ற  வேற்று மாநிலக் கூலிகள் தங்களின் சொந்த கிராமத்தில் நேற்று சுய மரியாதையுடன் விவசாயம் செய்து இந்த  உலகுக்கு உணவை உற்பத்தி செய்து வந்தவர்கள் . மத்திய இந்திய வனப்பகுதி பழங்குடிகள் தங்கள் மீதான அரச வன்முறை அவர்களை  வனப்பகுதியிலிருந்து விரட்டி அணடை மாநிலங்களில் கூலிகளாக ஆக்கியிருக்கின்றது.தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வன விலங்கு சரனாலயங்கள் என்ற பெயரில் வனத்தின் மீதான சமூக உரிமை வனத்துறை என்ற அரசின் கைகளுக்கு சென்றுவிட்டது.வனவிலங்குகளும் பழங்குடிகளும் பண்ணெடும் காலமாய் ஒரு சேர வாழ்ந்த வனத்தில் இன்றோ வனவிலங்குகளின் பாதுகாப்பு என்ற பெயரில் பழங்குடிகளின் வன உரிமை மறுக்கப்படுகின்றது. வன உரிமைச்சட்டம் உள்ள்ட்ட எந்த பழங்குடி வாழ்வாதார பாதுகாப்பையும் உத்திரவாதப்படுத்தாத மாநிலமாக தமிழகம் உள்ளது.
ஆக மத்திய இந்திய ஆதிவாசி  பழங்குடிகள் போராட்டம் அல்லது மேற்கு வங்கத்தின் சிங்கூர் விவசாயிகள் போராட்டம் அல்லது தஞ்சையில் மீத்தேன் திட்டத்திற்கு நிலத்தை தரமறுக்கும் ஏழை விவசாயிகள் அல்லது ஈரோடு , திருப்பூர் பகுதியில்  கெய்ல் இயற்கை வாயு குழாய்களை எதிர்க்கும் விவசாய்கள்  அல்லது திருநெல்வேலியின் கூடங்குளத்தில் இரண்டு  ஆண்டுகளுக்கு மேலாய் இடிந்தகரையில் அணு உலைக்கு எதிராக போராடும் மீனவ மக்கள் அல்லது தூத்துகுடியில் தாது மணல் கடத்தலினை எதிர்க்கும் மீனவர்கள் என வடிவில் மாறுபட்டிருப்பதாக கருதப்படும் போராட்டங்கள் இயற்கை வளங்களை மக்கள் உடைமையாக்கு என்ற ஒற்றை முழக்கத்தை மையப்படுத்தியவை. ஒன்றுபட்டு போராடவேண்டிய மக்கள் பிரிந்து கிடப்பது, பள்ளிகளில் நாம் படித்த நான்கு எருது ஓநாய் கதைகளையே நினைவு படுத்துகின்றது.








Photo: நீதி கேட்கும் லட்மணப்பூர் பதே மண்
(ச.பாலமுருகன்)

பீகாரின் பாட்னா உயர்நீதிமன்றம் கடந்த 9.10.2013 தேதி அம் மாநிலத்தின் ஆர்வல் மாவட்டம் லட்மணபூர் பதே கிராமத்தில்  நிகழந்த படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த குற்றவாளிகளை போதிய ஆதாரமில்லை எனக்கூறி விடுதலை செய்தது.
நிலபிரபுத்துவத்தின் ஆதிக்க கலாச்சாரம் ஊறிய பீகாரில் தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் தங்களின் கூலிக்காவும் , சுயமரியாதைக்காகவும் குரல் கொடுப்பது, அதற்காக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுபது சகிக்க முடியாத செயலாக நிலபிரபுத்துவம் காண்கிறது.தொடர்ந்து பீகாரில்  ஆதிக்க சாதியினர் மற்றும் நிலபிரபுக்களின் கூலிப்படையான ரன்வீர்சேனா என்ற அமைப்பு கிராமம் கிராமமாக தாழ்த்தப்பட்ட மக்களை படுகொலை செய்து வந்தது. 1976 முதல் 2001 வரை 18 க்கும் மேற்பட்ட அது போன்ற படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நிலபிரபுக்களின் கூலிப்படைகள் நிகழ்த்திய படுகொலைகள். 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி இரவு நடந்தேறியது. சோனா ஆற்றின் கரையில் உள்ள அந்த கிராமத்திற்கு படகுகளில் வந்த ஆயுதம் தாங்கிய பண்னையார்களின் கூலிப்படை உறங்கிக்கொண்டிருந்த கிராமத்தில் புகுந்து கதவுகளை உடைத்து கண்ணில் கண்ட எல்லோரையும் சுட்டுக்கொன்றது.58 தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் .இதில் ஒரு வயது குழந்தை உட்பட   27 பெண்கள் 16 குழந்தைகள் அடங்குவர். அன்றைய குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன் இதனை நாடு விடுதலை அடைந்த பின் நிகழ்ந்த அவமானகரமான சம்பவமாக குறிப்பிட்டார்.  இவ்  வழக்கு விசாரனைக்காக ஜெகனாதாபாத்திலிருந்து பாட்னா செசன்ஸ் கோர்டுக்கு மாற்றப்பட்டது. 90 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர் 30 க்கும் மேற்பட்ட சாட்சிகள் பிறல் சாட்சியாக மாறிய போதும் பலர் தைரியமாக குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியமளித்தனர். ஒரே குடும்பத்தில் ஒன்பது பேரை பலிகொடுத்தவர்கள் என பல பாதிக்க்கப்பட்ட மக்கள் சாட்சியமளித்தனர். இறுதியில் பாட்னா கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் 27.10.2010 தேதி  26 குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளியென முடிவு செய்து 16 பேருக்கு மரன தண்டனையும் 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது. இந்த வழக்கு பாட்னா உயர்நீதிமன்ற விசாரணைக்கு பின் குற்றவாளிகள் மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மூன்று நாட்கள் காலதாமதமாக நீதிமன்றம் சென்றுள்ளதாகவும் ,குற்றவாளிகள் வந்த படகில் இருந்த இரத்தகரைகளை போலிசார் கைப்பற்றவில்லை என சில காரணங்களைக்கூறி குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு நமது மத்தியதரவர்க்கத்தின் மனசாட்சியினை உலுக்கவில்லை. காட்சி ஊடகங்களில் பெரும் செய்தியாகவில்லை. இது பல செய்திகளில் ஒரு செய்தியாக நமது பெரும்பாலோரின் கவனத்தை பெறாமலேயே போய்விட்டது.நீதித்துறையின் செயல்பாடுகள் நமது நாட்டின் அரசியலைப்புச்சட்டம் மற்றும் பல்வேறு சட்டங்களின் வழிகாட்டுதலால் கட்டமைக்கப்பட்டுள்ளது, ஆனால் நீதிமான்கள் அனைவரும் சட்டம்  மற்றும் சாட்சியம் இதனை வைத்தே வழக்குகளை தீர்மாணித்துவிடுவதில்லை.சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட சாதியம் அதன் தாக்கம் நீதித்துறையின் பல்வேறு தீர்ப்புகளில் எதிரொலித்தே வருகின்றது.இடஒதுக்கீடு வழக்குகளில் இது அப்பட்டமாக வெளிப்படுகின்றன. நீதிபதிகளுக்குள் உள்ள சாதிய ஆதிக்கத்தைப்பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி கே. ராமசாமி 1994 ஆண்டு அப்பன்பாலு இங்கேலா /எதிர்/ கர்நாடக அரசு(1) என்ற வழக்கில் விவரித்துள்ளார். பீகாரில் தாழ்த்தப்பட்ட மக்கள்  நக்சல் இயக்கங்களுடன் சேர்ந்து  செய்த கொலைகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரணதண்டனையினை பல வழக்குகளில் உறுதி செய்த நீதிமன்றம் ,தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்ட வழக்குகளில் சிறு காரணங்களைக்காட்டி வழக்கினை தள்ளுபடி செய்து குற்றவாளிகளை விடுத்சலை செய்வது வாடிக்கையாகிவிட்டந்து என்பதே தாழ்த்தப்பட்ட மக்களின் குற்றச்சாட்டு. 2013 ஆண்டில்  ரன்வீர் சேனா செய்த படுகொலை வழக்குகளில்  இது மூன்றாவது வழக்கு குற்றவாளிகளுக்கு சாதகமாக  விடுதலை செய்யப்படுள்ளது. அவுரங்காபாத் மாவட்டத்தில் 34 தாழ்த்தப்பட்ட மக்களை கொலை செய்த வழக்கினை விடுதலை செய்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த  2013 மார்ச் மாதம் 1998 ல் போஜ்பூர் மாவட்டம் நகரி கிராமத்தில்  நடந்த படுகொலைக்கு காரணமானவர்கலையும் விவித்தது. மேலும் போஜ்பூர் மாவட்டம் பத்தானி தோலா கிரமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை படுகொலை செய்தவர்களையும் விடுவித்துவிட்டது. இறுதியாக லட்சுமணபூர் பாதே குற்றவாளிகள் விடுதலையாகி உள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதிய்னைசார்ந்தவன் ஆதிக்க சாதியினரை கொலைசெய்தால்  தண்டனை உறுதி என்பதும்,அதே கொலை குற்றவாளிகள் ஆதிக்க சாதியினாராக உள்ளபோது தொடர்ச்சியாக விடுவிக்கப்படுவதும் நீதிசார் நம்பிக்கைகளை வீணடித்து விடுகின்றது. அரசும் காவல்துறையும் உயர்சாதி ஆதிக்க மனப்பன்மையோடு செயல்பட்டுவருவதன் வெளிப்பாடே வன்கொடுமை  தடுப்புச்சட்டப்பிரிவில் தாக்கல் செய்யப்பட்ட எல்லா வழக்குகளையும் தள்ளுபடி செய்வதும், அதில் முறையாக விசாரணை மேற்கொள்ளாது  அலட்சியம் காட்டுவது, வேண்டுமென்றே வழக்கு விசாரணையில் பெரும் ஓட்டைகளை விட்டுவிடுவது எல்லாம் தீண்டப்படாதவர் பாதிக்கப்படும் வழக்குகளில் காவல்துறையால் திட்டமிட்டு நிகழ்த்தப்படுபவை.இதற்கு அரசாங்கத்தின் எல்லா ஆதரவும் உண்டு. லட்சன்புர் பதே கொலைகளில் ஈடுபட்ட ரன்வீர் சேனா கூலிப்படைக்கு உள்ள அரசியல் செல்வாக்கு  உள்ளது குறித்து  பல்வேறு சனநாயக் சக்திகள் குரல் எழுப்பினர். இதனால் இது குறித்து விசாரிப்பதற்காக ராபரிதேவி முதல்வராக இருந்தபோது நீதிபதி அமீர்தாஸ் தலைமையில்  விசாரனைக்குழு அமைக்கப்பட்டது. இந் நிலையில் 2005 ஆண்டு பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்த சமயம் நிதீஷ் குமார் பீகார் ம்தல்வராக பொருப்பேற்றதும் நீதிபதி அமீர்தாஸ் விசாரனைக்குழு விசாரனையை கால நீடிப்பு
 செய்யாமல் அதனை மூடிவிட்டார். ரன்வீசேனாவின் அரசியல் பின் புலத்தை  மக்கள் அறிவதை அன்றைய  நிதீஷ்குமார் மற்றும்  பா.ஜா.க கூட்டனி விரும்பவில்லை. அது பனத்துக்கு வந்த கேடு எனக்கூறி அதனை கைவிட்டது.

குடிமக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புக்கள் மற்றும் அர்சியல் சமூக உரிமைகளை நமது அரசியலைப்பு சட்டம் அங்கீகரித்துள்ளது. ஆனால் ஏட்டில் உள்ள வாய்ப்புகள் எழைகளுக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. தீண்டாமையின் தேசத்தில் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியின் அறம் போன்ற சொல்லாடல் பொதுவான மாயையினையும் போதையையும் ஏற்படுத்தியிருந்த போதும்,உண்மையில் சாதிமயமான சமூகத்தில்  நீதியையும் ,சனநாயகத்தையும் பெற ஒடுக்கப்பட்ட மக்கள்  தங்கள் மீதே   நம்பிக்கை பந்தங்களை எரியவிட்டுக்கொண்டு நீதியை பெற  நீண்டதூரம் பயணிக்கவேண்டி உள்ளது. ,
குறிப்பு;
1.
State Of Karnataka vs Appa Balu Ingale And Others ... - I
நீதி கேட்கும் லட்மணப்பூர் பதே மண்
(ச.பாலமுருகன்)

பீகாரின் பாட்னா உயர்நீதிமன்றம் கடந்த 9.10.2013 தேதி அம் மாநிலத்தின் ஆர்வல் மாவட்டம் லட்மணபூர் பதே கிராமத்தில் நிகழந்த படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த குற்றவாளிகளை போதிய ஆதாரமில்லை எனக்கூறி விடுதலை செய்தது.
நிலபிரபுத்துவத்தின் ஆதிக்க கலாச்சாரம் ஊறிய பீகாரில் தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் தங்களின் கூலிக்காவும் , சுயமரியாதைக்காகவும் குரல் கொடுப்பது, அதற்காக அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுபது சகிக்க முடியாத செயலாக நிலபிரபுத்துவம் காண்கிறது.தொடர்ந்து பீகாரில் ஆதிக்க சாதியினர் மற்றும் நிலபிரபுக்களின் கூலிப்படையான ரன்வீர்சேனா என்ற அமைப்பு கிராமம் கிராமமாக தாழ்த்தப்பட்ட மக்களை படுகொலை செய்து வந்தது. 1976 முதல் 2001 வரை 18 க்கும் மேற்பட்ட அது போன்ற படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நிலபிரபுக்களின் கூலிப்படைகள் நிகழ்த்திய படுகொலைகள். 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி இரவு நடந்தேறியது. சோனா ஆற்றின் கரையில் உள்ள அந்த கிராமத்திற்கு படகுகளில் வந்த ஆயுதம் தாங்கிய பண்னையார்களின் கூலிப்படை உறங்கிக்கொண்டிருந்த கிராமத்தில் புகுந்து கதவுகளை உடைத்து கண்ணில் கண்ட எல்லோரையும் சுட்டுக்கொன்றது.58 தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் .இதில் ஒரு வயது குழந்தை உட்பட 27 பெண்கள் 16 குழந்தைகள் அடங்குவர். அன்றைய குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணன் இதனை நாடு விடுதலை அடைந்த பின் நிகழ்ந்த அவமானகரமான சம்பவமாக குறிப்பிட்டார். இவ் வழக்கு விசாரனைக்காக ஜெகனாதாபாத்திலிருந்து பாட்னா செசன்ஸ் கோர்டுக்கு மாற்றப்பட்டது. 90 க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர் 30 க்கும் மேற்பட்ட சாட்சிகள் பிறல் சாட்சியாக மாறிய போதும் பலர் தைரியமாக குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியமளித்தனர். ஒரே குடும்பத்தில் ஒன்பது பேரை பலிகொடுத்தவர்கள் என பல பாதிக்க்கப்பட்ட மக்கள் சாட்சியமளித்தனர். இறுதியில் பாட்னா கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் 27.10.2010 தேதி 26 குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளியென முடிவு செய்து 16 பேருக்கு மரன தண்டனையும் 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது. இந்த வழக்கு பாட்னா உயர்நீதிமன்ற விசாரணைக்கு பின் குற்றவாளிகள் மீது தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை மூன்று நாட்கள் காலதாமதமாக நீதிமன்றம் சென்றுள்ளதாகவும் ,குற்றவாளிகள் வந்த படகில் இருந்த இரத்தகரைகளை போலிசார் கைப்பற்றவில்லை என சில காரணங்களைக்கூறி குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பு நமது மத்தியதரவர்க்கத்தின் மனசாட்சியினை உலுக்கவில்லை. காட்சி ஊடகங்களில் பெரும் செய்தியாகவில்லை. இது பல செய்திகளில் ஒரு செய்தியாக நமது பெரும்பாலோரின் கவனத்தை பெறாமலேயே போய்விட்டது.நீதித்துறையின் செயல்பாடுகள் நமது நாட்டின் அரசியலைப்புச்சட்டம் மற்றும் பல்வேறு சட்டங்களின் வழிகாட்டுதலால் கட்டமைக்கப்பட்டுள்ளது, ஆனால் நீதிமான்கள் அனைவரும் சட்டம் மற்றும் சாட்சியம் இதனை வைத்தே வழக்குகளை தீர்மாணித்துவிடுவதில்லை.சமூகத்தில் கட்டமைக்கப்பட்ட சாதியம் அதன் தாக்கம் நீதித்துறையின் பல்வேறு தீர்ப்புகளில் எதிரொலித்தே வருகின்றது.இடஒதுக்கீடு வழக்குகளில் இது அப்பட்டமாக வெளிப்படுகின்றன. நீதிபதிகளுக்குள் உள்ள சாதிய ஆதிக்கத்தைப்பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி கே. ராமசாமி 1994 ஆண்டு அப்பன்பாலு இங்கேலா /எதிர்/ கர்நாடக அரசு(1) என்ற வழக்கில் விவரித்துள்ளார். பீகாரில் தாழ்த்தப்பட்ட மக்கள் நக்சல் இயக்கங்களுடன் சேர்ந்து செய்த கொலைகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரணதண்டனையினை பல வழக்குகளில் உறுதி செய்த நீதிமன்றம் ,தாழ்த்தப்பட்ட மக்கள் கொல்லப்பட்ட வழக்குகளில் சிறு காரணங்களைக்காட்டி வழக்கினை தள்ளுபடி செய்து குற்றவாளிகளை விடுத்சலை செய்வது வாடிக்கையாகிவிட்டந்து என்பதே தாழ்த்தப்பட்ட மக்களின் குற்றச்சாட்டு. 2013 ஆண்டில் ரன்வீர் சேனா செய்த படுகொலை வழக்குகளில் இது மூன்றாவது வழக்கு குற்றவாளிகளுக்கு சாதகமாக விடுதலை செய்யப்படுள்ளது. அவுரங்காபாத் மாவட்டத்தில் 34 தாழ்த்தப்பட்ட மக்களை கொலை செய்த வழக்கினை விடுதலை செய்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 2013 மார்ச் மாதம் 1998 ல் போஜ்பூர் மாவட்டம் நகரி கிராமத்தில் நடந்த படுகொலைக்கு காரணமானவர்கலையும் விவித்தது. மேலும் போஜ்பூர் மாவட்டம் பத்தானி தோலா கிரமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை படுகொலை செய்தவர்களையும் விடுவித்துவிட்டது. இறுதியாக லட்சுமணபூர் பாதே குற்றவாளிகள் விடுதலையாகி உள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதிய்னைசார்ந்தவன் ஆதிக்க சாதியினரை கொலைசெய்தால் தண்டனை உறுதி என்பதும்,அதே கொலை குற்றவாளிகள் ஆதிக்க சாதியினாராக உள்ளபோது தொடர்ச்சியாக விடுவிக்கப்படுவதும் நீதிசார் நம்பிக்கைகளை வீணடித்து விடுகின்றது. அரசும் காவல்துறையும் உயர்சாதி ஆதிக்க மனப்பன்மையோடு செயல்பட்டுவருவதன் வெளிப்பாடே வன்கொடுமை தடுப்புச்சட்டப்பிரிவில் தாக்கல் செய்யப்பட்ட எல்லா வழக்குகளையும் தள்ளுபடி செய்வதும், அதில் முறையாக விசாரணை மேற்கொள்ளாது அலட்சியம் காட்டுவது, வேண்டுமென்றே வழக்கு விசாரணையில் பெரும் ஓட்டைகளை விட்டுவிடுவது எல்லாம் தீண்டப்படாதவர் பாதிக்கப்படும் வழக்குகளில் காவல்துறையால் திட்டமிட்டு நிகழ்த்தப்படுபவை.இதற்கு அரசாங்கத்தின் எல்லா ஆதரவும் உண்டு. லட்சன்புர் பதே கொலைகளில் ஈடுபட்ட ரன்வீர் சேனா கூலிப்படைக்கு உள்ள அரசியல் செல்வாக்கு உள்ளது குறித்து பல்வேறு சனநாயக் சக்திகள் குரல் எழுப்பினர். இதனால் இது குறித்து விசாரிப்பதற்காக ராபரிதேவி முதல்வராக இருந்தபோது நீதிபதி அமீர்தாஸ் தலைமையில் விசாரனைக்குழு அமைக்கப்பட்டது. இந் நிலையில் 2005 ஆண்டு பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியிலிருந்த சமயம் நிதீஷ் குமார் பீகார் ம்தல்வராக பொருப்பேற்றதும் நீதிபதி அமீர்தாஸ் விசாரனைக்குழு விசாரனையை கால நீடிப்பு
செய்யாமல் அதனை மூடிவிட்டார். ரன்வீசேனாவின் அரசியல் பின் புலத்தை மக்கள் அறிவதை அன்றைய நிதீஷ்குமார் மற்றும் பா.ஜா.க கூட்டனி விரும்பவில்லை. அது பனத்துக்கு வந்த கேடு எனக்கூறி அதனை கைவிட்டது.

குடிமக்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்புக்கள் மற்றும் அர்சியல் சமூக உரிமைகளை நமது அரசியலைப்பு சட்டம் அங்கீகரித்துள்ளது. ஆனால் ஏட்டில் உள்ள வாய்ப்புகள் எழைகளுக்கு எட்டாத தூரத்தில் உள்ளது. தீண்டாமையின் தேசத்தில் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியின் அறம் போன்ற சொல்லாடல் பொதுவான மாயையினையும் போதையையும் ஏற்படுத்தியிருந்த போதும்,உண்மையில் சாதிமயமான சமூகத்தில் நீதியையும் ,சனநாயகத்தையும் பெற ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மீதே நம்பிக்கை பந்தங்களை எரியவிட்டுக்கொண்டு நீதியை பெற நீண்டதூரம் பயணிக்கவேண்டி உள்ளது. ,
குறிப்பு;
1.
State Of Karnataka vs Appa Balu Ingale And Others ... - I
 
நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணய்யர்:கடைக்கோடி இந்தியருக்கும் நீதி
(ச.பாலமுருகன்)
இன்று(15.11.2013) முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணய்யரின் 99 ஆம் பிறந்த நாள்.அவரின்  மூப்பு காரணமாக உடலில் உள்ள தளர்ச்சியினை தனது சிந்தனை மற்றும் எழுத்துகளில்   காட்டாத ஒரு செயல்பாட்டாளராகவே அவர் திகழ்கின்றார். நாட்டின் கடைக்கோடி சாமானிய ஏழை மனிதனுக்கும் சட்டம் மற்றும் நீதியின் வெளிச்சம் சென்றடைய வேண்டும் என்பதை நோக்கி அவரின் செயல்பாடு உள்ளது.
 மிக அரிதான ஆளுமையான நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணய்யர் வழக்குரைஞர், கைதி, சட்டமன்ற உறுப்பினர்,மாநில அமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதி,மனித உரிமை செயல்பாட்டாளர் என பல வடிவங்களை கடந்து வந்தவர்.இந்த பயணம்  நெடுகிலும் ஏழை மக்களுக்கான சமூக நீதி  மீதான கரிசனத்தினை வெளிப்படுத்தினார்.
அன்றைய சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியான கேரளத்தின் பாலக்காட்டில் அவர் பிறந்தபோதும் அவரின் குடும்பம் கேரளத்தின் குயிலாண்டியிக்கு இடம் பெயர்ந்தது. ஒரு புகழ்வாய்ந்த  வழக்குரைஞரின் மகனாக வளர்ந்த அவர் அண்னாமலை பலகலைகழகத்திலும் பின் சென்னை சட்டக்கல்லூரியிலும் கல்வியினை முடித்தார்.பின் வழக்குரைஞராக மலபார் மற்றும் கூர்க் உள்ளிட்ட பகுதிகளில் பணி புரிந்தார். அந்த காலகட்டத்தில் பொதுவுடமை மற்றும் தொழிற்சங்க இயக்கத்தவருக்கு அவர் தொடர்ந்து வாதாடி வந்தார்.இதனால் ஒரு சமயம்  நீதிபதி கூட அவரை தனியே அழைத்து "கம்யூனிஸ்டுகளுக்கு ஆஜராகி ஏன் பெயரை கெடுத்துக்கொள்கின்றீர்கள் ,உங்களை போலீசார் உளவு பார்ப்பார்கள் "என எச்சரிக்கையும் செய்தனர். நாடு விடுதலை அடைந்த சமயம் பொதுவுடமை இயக்கம் தடை செய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணய்யர் தொடர்ந்து கம்யூனிஸ்டுகளின் மீது போடப்பட்ட வழக்குகளில் வாதிட்டதால் காவல்துறையினர் கோபத்துடனிந்ருந்தனர். தலைமறைவு கம்யூனிஸ்டுகளுடன் குறிப்பாக பி.சி.ஜோசி, பி.ராமமூர்த்தி, என்.கே.கிருஷ்ணன் போன்றோருடன் தொடர்பிருப்பதாக பாதுகாப்பு சட்டத்தில்   1948  மே மாதத்தில் வழக்கு பதிவு செய்து, இரவில் கைது செய்து,அவரை கண்ணனூர்  சிறையில்  சிறைபடுத்தப்பட்டார்.ஒரு மாதம் கழித்து விடுவிக்கப்பட்டார்.சிறையின் அவலங்களையும்,கைதிகளின் நிலையையும் அவர் நேரிடையாக உணர இது உதவியது. பொதுவுடமை இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு அவர்கள் 1952 தேர்தலில் போட்டியிட்ட போது வீ.ஆர். கிருஷ்ணய்யர் குத்து பரம்பா  சட்டமன்ற தொகுதியில் சுயாட்சையாக நின்று பொதுவுடமை இயக்கத்தின் ஆதரவில் வெற்றி பெற்று சென்னை மாகான சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அவர் மலபார் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த போதும் தன்னை ஒருபோதும் மலபார் பிரதிநிதி என்று மட்டும்  கருதவில்லை. ஒட்டுமொத்த சென்னை மாகான பிரச்சனைகளுக்காக அவர் குரல் எழுப்பினார். பஞ்சம் பாதித்த ஆந்திரத்தின்  ராயல்சீமா மக்களுக்கு கஞ்சி தொட்டி நிர்வாகிப்பது குறித்தும் ,மலபார் நெசவாளர்களின் நிலை குறித்தும் அவரின் சட்டமன்றத்தில் குரல் எழுப்பினார்.மக்கள் பஞ்சத்தையும் வறுமையையும் எதிர் கொண்டநிலையில் முதல்வர்  ராஜாஜி அவர்கள் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் சலுகை அறிவித்தபோது  ஆட்சி செய்ய அரசு ஊழியர்களை கைக்குள் வைத்துக்கொள்ள சலுகை அறிவிக்கும் ஆங்கிலேய அரசின் தொடர்ச்சியாக சுதேசி அரசும் இருப்பதை,சட்டமன்றத்தில்  அவரின் 1952 ஜூலை மானிய கோரிக்கை தொகை குறைப்பு தீர்மாணம் மீதான உரை சுட்டிக்காட்டியது.  மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு கேரளா மாநிலத்தில் 1957ல் அவர் தலைச்சேரி சட்டமன்ற தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1957 முதல் 1959 வரை ஆட்சி புரிந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரி பாட் தலைமையிலான முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில் அவர் அமைச்சராகவும் சட்டம், சிறை நிர்வாகம் ,உள் துறை , மின்சாரம் மற்றும் நீர்பாசனம்,சமூக நலத்துறை  அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இந்த கால கட்டத்தில் தமிழகத்தின் காமராஜர் முதல்வராக இருந்தார். பாசனத்துறை அமைச்சராக இருந்த
 சி.சுப்பிரமணியம் கோவை மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்கும் மற்றும் மக்களின்  குடிநீர் தேவைக்கும்  கேரளாவின் மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மேற்கு  நோக்கி பாயும்  ஆறுகளை கிழக்கு புறமாக திருப்பிவிட்டு தமிழகமும், கேரளாவும் சேர்ந்து பயன்பெறும் பரம்பிக்குளம் திட்டத்தை முன்மொழிந்தார். முதல்வர் நம்பூதிர்பாட்டும் ,வீ.ஆர்.கிருஷ்ணய்யரும் இதற்கு சம்மதித்தனர். ஆனால்  கேரளாவில்  எதிர் கட்சியான காங்கிரஸ் கட்சியினர் வீ.ஆர்.கிருஷ்ணய்யர் தமிழர் என்பதால் தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி பிரச்சனை கிளப்பினர்.ஆனால் தமிழக முதல்வர்  காமராஜ் அவர்கள் இதில் தலையீடு செய்து பிரச்சனை பெரிதாகாமல் பார்த்துக்கொண்டார்.திட்டம் நிறைவேறியது.இக் கால கட்டத்தில் கேரளாவில் சிறியதும் பெரியதுமாக பல நீர்பாசன திட்டத்திற்கு  தொலைநோக்கு பார்வையோடு திட்டமிட்டார். உழைப்பு தானத்திட்டம் என்ற பெயரில் இன்றைய நூறு நாள் வேலைத்திட்டம் போல,  தினம் ரூ 50 கூலி தரும் திட்டம் செயல்பட ஆலோசனை வழங்கினார்.இத்திட்டத்திற்கான கருத்தினை லெனின் சோவியத் அரசாங்கத்தில் நடைமுறைபடுத்திய திட்டத்திலிருந்து பெற்றார்கள். மக்கள் சக்தியினை பயன்படுத்தி குறைந்த செலவில் திட்டங்களை நிறைவேற்றும் புதிய முறையினால் பல ஆக்கப்பூர்வமான வேலைகள் அந் நாளில்  கேரளாவில் நடந்தது.  மேலும் சட்ட அமைச்சர் என்ற அளவில் வரதட்சனை ஒழிப்பு சட்டத்தினை நாட்டிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்தார்.சிறை சீர்திருத்தம் உள்ளிட்ட பல சனநாயக செய்ல்பாடுகள் எடுக்கப்பட்டது.சிறை கைதிகள் கண்ணியத்தோடு நடத்தப்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
1959 ல் அவர் பங்கேற்றிருந்த  மந்திரிசபை 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி  நேருவினால் கலைக்கப்பட்டது.  அதன் பின் 1960 ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஏழு வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளர் குஞ்ஞராமன் என்பவரிடம்  தோல்வியினை தழுவினார். அந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதையும்  வாக்களிக்கும் வயதே வராதவர்களை வைத்து  கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருப்பதையும் அறிந்து அதற்கு எதிராக வழக்கினை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்தார். இரண்டரை ஆண்டுகள் கழித்து ,இறுதியில் ஐந்து வாக்கு வித்தியாசத்தில்  கிருஷ்ணய்யர்  வெற்றி பெற்றதாக நீதிமன்றம் அறிவித்தது. மீண்டும் சட்டமன்றம் சென்றார்.இச் சுழலில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் பிரிந்து  மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி என்று துவங்கி கட்சி பிளவு பட்ட சூழலில் 1965 ல் தேர்தலை சந்தித்து தோல்வியினை சந்தித்தார். அதன் பின்பு  அரசியலிலிருந்து விலகி அவர் உயர்நீதிமன்ற வழக்குரைஞராக பணிபுரிய துவங்கினார்.அன்றைய கேரளா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எஸ்.மேனன் என்பவர் அவரின் புலமையினை கண்டு  அவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக்க பரிந்துரை செய்தார். 1968 ல் உயர்நீதிமன்ற நீதிபதியாக பொருப்பேற்றார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் நடந்து வரும் போது செங்கோல் ஏந்தி 'உஸ்" என சப்தம் எழுப்பி ஊழியர் ஒருவர் நீதிபதிக்கு  முன்னே வரும் பழக்கம் இன்னமும் நடைமுறையில் உள்ளது. ஆனால் அவர் அது போன்ற  மரியாதை தனக்கு வேண்டாம் என மறுத்தார். ஆங்கிலேய நீதிபதிகள் இந்தியர்களைக்காட்டிலும் தாங்கள் உயர்ந்தவர்கள் என காட்டுவதற்க்காக கைகொண்ட வழக்கம் சனநாயக சமூகத்திற்கு ஏற்புடையதல்ல என  அதனை மறுத்தார்.மேலும் காலனி ஆதிக்கத்தின் எச்சங்களான நீதிபதிகளை "யுவர் ஆனர்", "மை லார்ட்" என அழைப்பதை தவிர்த்து "மிஸ்டர் ஜட்ஜ்" என தன்னை அழைக்க கூறினார்.அவர் கேரளாவின் அமைச்சராக இருந்த போது மத்திய சட்ட அமைச்சக கூட்டத்தில் நீதிமன்றங்களில் இதுபோன்ற அடிமை முழக்கங்கள் கேட்கின்றது. இவற்றை தவிர்த்து ,இந்திய நீதிமன்றத்தை இந்திய மயமாக்கப்படவேண்டும் என்று குரல் எழுப்பியதை நினைவுபடுத்தினார்.
1971 ல் அவர் மத்திய சட்ட கமிஷன் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.பின் 1973 ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்..உச்சநீதிமன்றத்தில் அவரின் தீர்ப்புகள் தனித்துவம் வாய்ந்தது. வெறும் சட்டவாதமாக மட்டும் வழக்குகளை பார்க்காது . அதன் பின் உள்ள சமூக ,அரசியல் மற்றும் சனநாயக பிரச்சனைகள் அவர் விரிவாக  தீர்ப்புகளில் எடுத்துரைத்தார்.
1975  ஜீன் 12 ஆம் தேதியில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின்  ரேபரேலி தேர்தல் வெற்றி  அரசு இயந்திரத்தை பயன்படுத்தி முறைகேடாக பெறப்பட்டதாக ராஜ் நாராயணன் தாக்கல் செய்த வழக்கில் ,
அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்திராகாந்தியின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.அந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை உத்திரவு பெற வேண்டி உச்சநீதிமன்றத்தில் இந்திராகாந்தி வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் முன் வந்தது.அவர் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்புக்கு முழுதாக தடையுத்தரவு வழங்கவில்லை.மாறாக இந்திராகாந்தி பிரதமராக தொடரலாம் என்றும் ஆனால் பாராளுமன்றத்தில் வாக்களிக்க முடியாது என்றும் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் பிரதமரின் தர்மம் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த தீர்ப்பினால் ஆறு மாதத்தில்  மீண்டும் தேர்தலை சந்திக்கவேண்டிய நிர்பந்தம் இந்திராகாந்திக்கு உருவானது.இதன் தொடர்ச்சியாக 1975 ஜீன் 24 ஆம் தேதி நெருக்கடி நிலையினை அறிவித்தார். மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது. உரிமைகளுக்காக நீதிமன்றம் செல்லும் உரிமை மறுக்கப்பட்டது. எங்கும் அரச வன்முறையும் அத்துமீறலும் நிகழ்ந்தது.சனநாயக சமூகத்தின் மீது பெரும் தாக்குதலையும் ,பாதிப்பையும்  நெருக்கடி நிலை ஏற்படுத்தியது.
 உச்சநீதிமன்றத்தில் கிருஷ்ணய்யர் வழங்கிய பல தீர்ப்புகள் ஏழைகளின் சனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் இருந்தது. இக் காலத்தில் உச்சநீதிமன்றத்தில் சாமானிய ஏழைகள் எழுதிய கடிதங்கள்கூட சில சமயம் வழக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மரனதண்டனையினை முற்றிலுமாக எதிர்த்தார். அதனை தண்டனை வடிவமாக கருத முடியாது என்பதில் உறுதியுடன் நின்றார்.  மேலும் இலவச சட்ட உதவி முறைக்கு அவர் உயிர் கொடுத்தார்.1980 நவம்பர் 14 வரை உச்சநீதிமன்றத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றார்.ஓய்வுக்கு பின்பும் தொடர்ந்து மனித உரிமைகளுக்காகவும் ,கண்ணியத்திற்காகவும் முகம் அறியாத அனைவருக்கும்  ஆதரவு அவர் குரல் கொடுத்து வரலானார்.
 1996 ல் வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில்  கர்நாடக தமிழக அதிரடிபடி அதிரடிப்படையினர் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களின் பின்னனியில் பாதிக்கப்பட்ட பழங்குடிமக்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்து அந்த மனு மாவட்ட மனித நீதிமன்றத்துக்கே வழக்கை எப்படி நடத்துவதென்ற விதி இல்லை என திருப்பட்டபோது அது குறித்து எதிர்பார்புகளின்றி  நான் எழுதிய கடிதம் அவரின் நடவடிக்கையால் வழக்காக உயர்நீதிமன்றம் எடுத்துக்கொண்டது. இரண்டு நீதிபதிகள் ஓராண்டு அந்த வழக்கை விசாரித்தனர். மூத்த வழக்குரைஞர் கே.ஜி.கண்ணபிரான் மனுதாரகளுக்காக வாதாடினார். அதிரடிபடையின் அத்துமீறல்களை ஓரளவு கட்டுப்படுத்த அந்த வழக்கு உதவியது.பழங்குடியினருக்காக நாட்டின் முக்கிய மனிதர்கள் ஆதரவு தர முன் வந்தது சநாயகத்தின் மீது  நம்பிக்கையினை உருவாக்கியது.1999 வருடம் மனித உரிமை ஆர்வலர்கள் அதிரடிபடையினரால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று அரச வன்முறையின் கோரத்தை அம்பலப்படுத்திய பின்னனியில் நீதிபதி வீ.ஆர்.கிருஷ்ணய்யர் இது குறித்து தேசிய மனித உரிமை  ஆணையத்திற்கு எழுதிய கடிதம் , கர்நாடக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சதாசிவா தலைமையில் அதிரடிப்படை அத்துமீறல்களை விசாரிக்க குழு அமைத்து விசாரிக்க உதவியது.
 நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணய்யர் தன்னைச்சுற்றிய சமூகத்திற்கு  தொடர்ந்து நம்பிக்கைகளை விதைத்துக்கொண்டே உள்ளார்.மூத்தோர் முக்கியமாக செய்யவேண்டிய அரும் பணி இது.அவர் கடந்த தலைமுறையின் அரிதாய் எஞ்சி நிற்கும் உன்னத மனிதர்.அவரை அவர் வாழும் காலத்திலேயே நினைவு கொள்வோம்.
 Photo: 15.11.2013 ,நீதி நாயகம் வீ.ஆர்.கிருஷ்ணய்யரின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு , கோயமுத்தூர் வழக்குரைஞர் நண்பர்கள் சுதீஷ், சுந்தரமூர்த்தி, ச.பாலமுருகன், விக்டர், அபுபக்கர் ஆகியோர் எர்ணாகுளம் சென்று அவரை நேரில் சந்தித்து வீ.ஆர்.கிருஷ்ணய்யருக்கு எங்களின் மனமார்ந்த அன்பினையும் வாழ்த்துக்களையும்  கூறிவந்துள்ளோம்.
Manual Scavengers: Indian Railways in denial
Feb 25, 2013
Ten years after a PIL was filed against the Indian Railways as the biggest violator of the Manual Scavengers Prohibition Act with 172,000 open discharge toilets, the ministry continues to deny the practice of manual scavenging. This article traces the journey of the petition.
It is a medium close-up shot. A railway track cuts diagonally through the photograph. The symmetry is sharp and unmistakable. Overpowering this symmetry, however, is the human symmetry of Suresh and Ratanlal positioned next to each other in between the two rail tracks.
The long brushes of Suresh’s broom and the high-pressured stream from Ratanlal’s water jet too are in symmetry. Ratanlal attacks the excreta with the water jet while Suresh brushes aside the discharge. Both men, hunched forward, their pants rolled up till their knees, are coordinated in their bid to rid the tracks of human excrement issued from open discharge toilets of the Indian Railways.
The text adjacent to the photograph of Suresh (aged 35) and Ratanlal (aged 47), in the 2005 counter-affidavit filed by the petitioners Safai Karamchari Andolan (SKA) and others, states that both men, permanent employees at Delhi Sarai Railway Station, earn Rs 8,000 a month. Both received an education till Class 10. Both have young children. And both suffer from skin allergies.
No uniform. No shoes. Suresh and Ratanlal are not alone. Other photographs in the affidavit capture Anil (aged 26) and Hari Shankar (aged 28) at platform number nine, Old Delhi Railway Station; contract workers Suguna (Rs 2,300 per month) and Sunganthala (Rs 1,800 per month) at platform number 5 and 7, Egmore Railway Station, Chennai; Chedilal and Suraj Bhan, who have been manually handling human waste at the Ludhiana Railway Station for 13 and 20 years, respectively. These individuals dispose of faecal discharge from the railway tracks either as permanent employees or as contract workers.
Since the days of the British Raj, Indian Railways has continued to unapologetically exploit the cheap labour of ‘manual scavengers’ (hereafter safai karamcharis) for the everyday disposal of human excrement directly discharged onto the rail tracks. With its 43,000 passenger coaches, more than 8,000 stations, 172,000 toilets and a dense network of tracks, the railways is the biggest violator of the dignity of people condemned by caste to manual scavenging.
Deeply entrenched in the stranglehold of the caste structure, manual scavenging is closely intertwined with untouchability. Barring a few exceptions, all manual scavengers are from scheduled caste (SC) families, and a majority are women.
2013 marks the completion of the tenth year of the public interest litigation (PIL) initiated by SKA against the Indian Railways in the Supreme Court and subsequently in the Delhi High Court. The only thing that’s changed in the last decade is the advocates, bench of judges and the ‘modernising’ face of the railways. The Ministry of Railways’ consistent denial of manual scavenging and the petitioners’ unwavering resolve to restore dignity to the safai karamcharis remain determinedly unchanged. This article traces the journey of the petition that is pending in the Delhi High Court.
Denials
The Employment of Manual Scavengers and Construction of Dry Latrines (Prohibition) Act outlawed manual scavenging in 1993. State governments have always remained indifferent to the issue and have denied the existence of manual scavenging. Against a background of painfully tardy implementation of the 1993 Act, the continuing indignity and untouchability resulting from such labour and the existence of dry latrines was put forward in the Supreme Court as a PIL (Safai Karamchari Andolan vs Union of India) in 2003. The legal whip of the Supreme Court, the petitioners hoped, would push state governments out of their indolence and galvanise efforts to eradicate the practice.
The petitioners -- Safai Karamchari Andolan (SKA) and six other organisations striving for the eradication of manual scavenging -- sought, inter alia, strict implementation of the 1993 Act and stressed the enforcement of fundamental rights as enshrined in Articles 14, 17, 19 and 21. The petition also made visible the invisible issue of employment of safai karamcharis by defence establishments, the railways and public sector undertakings (PSUs).
In response to the petition, a Supreme Court bench (in April 2005) comprising Justices H K Sema and S N Variava directed all state governments as well as ministries/corporations of the union government to file an affidavit, within six months, through a senior officer in charge of the matter and willing to take personal responsibility for the veracity of the content of the affidavit regarding the state of manual scavenging, utilisation of funds and number of people rehabilitated since 1993. What came in six months later (November 2005) were affidavits from states denying the existence of the practice.
The Ministry of Railways (MoR) in its 2004 affidavit presumptuously stated that all dry latrines had been converted into aqua latrines across the railways and that without provision of washable aprons at all important stations, ‘manual scavenging cannot be totally eradicated’. It further cited scarce resources and fund constraints as factors limiting the upscale of better technology for toilets. “They got a severe blasting from the Supreme Court for such a response,” says Shomona Khanna, the advocate who represented the petitioners in the Supreme Court till 2011. Sufficiently provoked, the court directed the secretary of the Railways Board to file a detailed affidavit showing the scheme prepared for the total elimination of manual scavenging.
In his 2006 affidavit, the secretary described the statement (‘manual scavenging cannot be totally eradicated’) in the previous affidavit as ‘inaccurate’. This was an inane attempt at damage control since he, in the same line, reasserted that the practice of manual scavenging in fact did not exist in the railways. The ministry has, in fact, consistently and stubbornly stuck to this statement even in the face of the damning photographic evidence filed by the petitioners. The Supreme Court refuses to take this as an answer.
Impasse
In her best-known work, On Photography, Susan Sontag, American filmmaker and political activist, wrote: ‘Photographs furnish evidence. Something we hear about, but doubt, seems proven when we’re shown a photograph of it. In one version of its utility, the camera record incriminates. In another version of its utility, the camera record justifies.’ Sontag’s perceptive insight into the dual utility of the photograph seamlessly explains the consciously different reading of the photographic evidence by the Ministry of Railways.
For the petitioners, photographs of Suresh, Ratanlal and others make for incriminating evidence against the ministry’s blind denial of manual scavenging. However the ministry, by selectively harping on the definition of manual scavenging in the 1993 Act, maintains that cleaning the railway tracks with high pressure water jet technology (such as the one in Ratanlal’s hands) does not qualify as manual scavenging. Further, claiming the obsolescence of dry toilets across the railways, the ministry declares manual scavenging to be a thing of the past. What remains unacknowledged is Suresh’s broom and the tin plates in Suguna’s hands, as well as the bucket into which Suguna is seen piling the excrement, at platform number 5, Egmore Railway Station, Chennai.
Besides harping on the obsolescence of the practice of manual scavenging and dry toilets across the railways, and that the ‘faecal discharge disintegrates on its own’, the railways affidavits claim that various technologies (sealed, bio and vacuum toilets) are under consideration and that washable aprons and control discharge toilet systems (CDTS) will be scaled up at important stations; that through notices in train toilets, passengers are requested to avoid using toilets at stations; and that the Ministry of Railways has always maintained high standards in waste disposal and is aware of the need to better manage the discharge from train toilets in the interests of ‘environmental protection’.
Angered at the casual mockery of their hard work, as reflected in the ministry’s affidavits, the petitioners filed a damning point-wise rebuttal in 2007. Under oath they argued that the ministry was deliberately misleading the court and perverting the process of justice with its outright lies. Fiercely opposing the ministry’s assertion that no manual scavenging was taking place, the petitioners criticised the ‘modern face’ of the railways as premised on a foundation of oppression and violation. They stressed that the ministry, by narrowly interpreting the definition of manual scavenging in the 1993 Act, had knowingly refused to acknowledge that manual scavenging is a violation of fundamental rights and a statutory offence. The ministry continued to unconscionably perceive the problem as a sanitation and environment problem, not a gross violation of human dignity.
The petitioners’ affidavit affirmed that manual scavenging was continuing unabated and negated the railways’ insistence that the use of technologies such as water jets to clean railway tracks was not manual scavenging. Based on their interactions with safai karamcharis at railway stations, the petitioners argued that such technology was usually not provided, or that the ‘powerful water jet’ was nothing more than a water hose that required as much manual handling. “The pressure of the jet often sends the excrement flying into the faces and bodies of the safai karamcharis,” noted Girender Nath, staff member, National Commission for Safai Karamcharis.
The new Bill on manual scavenging, while broadening the definition of manual scavengers to encompass inter alia persons employed to dispose of human excreta on the railway tracks, proposes that the same people, if using protective gear, shall not be deemed ‘manual scavengers’. The petitioners believe that no matter what protective gear is given to people it will not mitigate their experience of severe social marginalisation and discrimination.
The Planning Commission’s 2006 Working Group on Empowerment of Scheduled Castes described manual scavenging as: “A gross violation of human rights and the worth of the human person and flies in the face of the Constitutional guarantee assured, in its very Preamble, of a life with dignity for every individual in the country.”
The continuous stonewalling by the railways has stymied the interpretative exercise in the courtroom. The affidavits show the ministry’s lack of commitment and evasive approach towards fixing targets and achieving time-bound rehabilitation. The petitioners demanded that action be taken against the secretary of the Railways Board who was incapable of making an accurate assessment of the continuance of the practice, swore by a false affidavit, and insulted the wisdom of the courts.
In 2011, the Supreme Court transferred a part (concerning Indian Railways) of Safai Karamchari Andolan vs Union of India to the Delhi High Court. Since then, the railways has come up with a new chant -– bio-toilets.
Technologically speaking
Prior to the transfer of the case to the Delhi High Court, the railways, over the years, has been discussing four major technological innovations to limit manual handling of human excrement on the railway tracks. These include concrete washable aprons, controlled discharge toilet systems (CDTS), bio-toilets and vacuum toilets. The ministry promised a scale-up of the first two options but has not seriously considered vacuum toilets, popularly used in trains across Europe. It has, however, unmistakably backed the installation of bio-toilets (‘subject to the availability of funds’).
Intrigued, the high court ordered an inspection of bio-toilets led by a team of senior advocates P S Narasimha and Rajiv Nanda. In their status report to the court, the advocates described work on bio-toilet installation as being extremely slow and criticised the Ministry of Railway’s timid target of installing 500 bio-toilets (out of 172,000 toilets) till March 2012. They sought assistance from the Hazards Centre, an organisation that maintains that technology cannot be implemented in isolation. After an independent assessment of bio-toilets, Hazards Centre found two major information loopholes in the ministry’s claim that bio-toilets reduce excretal discharge into the air and water: 1) omission and mention of slurry, a guaranteed by-product of the process, which may or may not contain harmful pathogens, and 2) no mention of potentially hazardous, gaseous by-products such as methane or hydrogen sulphide.
The petitioners were unwilling to take the risk. Not wanting the installation of bio-toilets to be a costly exercise and an environmental hazard recklessly installed by the Indian Railways in the name of liberation of manual scavengers, they requested the high court to institute an interdisciplinary panel to investigate the feasibility, design, financial and environmental sustainability of a range of competent technological solutions (not just bio-toilets) that could be installed in the railways.
The ministry’s haphazard efforts at exploring alternative solutions, and persistent decade-long denial in acknowledging and identifying manual scavengers employed by the railways is cause for serious concern. Appallingly, every survey by the concerned departments and states undertaken by the Ministry of Social Justice and Empowerment, or MSJE (the nodal agency for the rehabilitation of manual scavengers) since the enactment of the 1993 Act, has bypassed the Indian Railways.
Aware of the need to liberate safai karamcharis, the MSJE, in its 2011 affidavit to the Delhi High Court, asked the railways for a list of manual scavengers eligible for rehabilitation benefits. The request was an exercise in futility as the Ministry of Railways has consistently denied the existence of the practice, thereby preventing safai karamcharis and their dependants from accessing the rehabilitation benefits they are entitled to.
“Even if we were to go by the extremely conservative estimate of two manual scavengers per railway station, there are still 17,000 of them to be liberated and rehabilitated. But we do not know who they are,” says Khanna. Her concern -- to identify and consolidate a database of safai karamcharis -- has been endorsed by the National Advisory Council. The petitioners believe that the absence of rehabilitation benefits and arbitrary replacement of open-discharge toilets with bio-toilets will result in loss of livelihoods for the safai karamcharis. But they remain hopeful about the progress of the case in the Delhi High Court. The court, they believe, has given them a space to talk. They had six hearings between August and December 2012.
Stiffening the legal whip?
Manual scavenging is an assault on the dignity of safai karamcharis. The earnestness of the judiciary in the last decade to readily confront the issue and whip state governments and ministries into action has been appreciated. Although the interventionist attitude of the Supreme Court waned after the initial years of the petition, the last two years have seen a revival of interest. Recent examples of a stiffening of the legal whip include a district magistrate being reprimanded for filing an affidavit that falsely claimed the absence of manual scavenging in his jurisdiction. And the Supreme Court’s arm-twisting of the Centre to enact the law against manual scavenging that’s pending as a Bill before the Parliamentary Standing Committee of Social Justice and Empowerment.
Advocate Khanna believes that the slow pace of the case in the Supreme Court could be attributed to the large number of respondents (state governments, departments, ministries) that the court has to deal with, insufficient number of hours the Supreme Court of India devotes to public interest litigations, and the invisible nature of manual scavenging, in that people do not think about the issue.
Khanna believes that the arguments of the case have not only moved the Supreme Court but have shocked them. Therefore, each time the bench of judges changes the story begins from scratch. On more than one occasion the court, surprised that dry latrines are not obsolete, has burdened the petitioners with gathering more evidence. The petitioners (Wilson Bezwada’s Safai Karamchari Andolan) have taken such orders in their stride and returned with proof. They were even surprised to see a judge educate his colleague about manual scavenging based on a documentary the judge had watched. Such surprises, coupled with the judge’s keen interest in the matter, often catalyse the interpretative exercise inside the courtroom.
The petitioners’ objective has always been to uncover an area of rights violation that has been rendered invisible by society and polity. It is important to first openly acknowledge the issue to be able to assess, budget and eradicate it. The continuing practice of manual scavenging in the Indian Railways assists the social ostracism these people face and stops them from assuming their full role as citizens of India.
Advocate Khanna, having fought on behalf of the petitioners for over six years in the Supreme Court, withdrew from the case in 2011. She remains optimistic and continues to represent the petitioners in the high court case against the Indian Railways. As she awaits the next hearing, in January 2013, she is prepared to re-invent the wheel yet again and smilingly notes: “Now the bench of judges will change again.”